சட்டப்பேரவை இடைத்தேர்தலில் ராஜஸ்தானில் காங்கிரசும், அரியானாவில் பாஜகவும் வெற்றிபெற்றன.
ராஜஸ்தானில் ராம் கார், அரியானாவில் ஜிந்த் சட்டப்பேரவை தொகுதிகளில் கடந்த 28-ந்தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. இன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டன.
ராஜஸ்தான் ராம்கார் தொகுதியில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் ஷாபியா கான் 12,298 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளரை வெற்றி கண்டார். இதனால் 200 உறுப்பினர்களைக் கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேரவையில் காங்கிரசின் பலம் 100 ஆனது.
அரியானாவின் ஜிந்த் தொகுதியில் பாஜக வேட்பாளர் கிரிஷன் மேத்தா 12,935 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட அக்கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் சுர்ஜிவாலா 3-வது இடமே பிடித்தார். இந்திய தேசிய லோக்தளம் கட்சியில் இருந்து பிரிந்து தனிக் கட்சியான ஜனநாயக ஜனதா கட்சியின் வேட்பாளர் இரண்டாவது இடம் பிடித்தார்.