ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு காக்கிச்சட்டை அணிந்து ஆட்டோ ஓட்டிச் செல்ல மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் குஷியாகினர்.
ஆந்திராவில் மூன்று சக்கர வாடகை வாகனங்கள், மற்றும் டிராக்டர் போன்ற விவசாயத்திற்கு பயன்படும் வாகனங்களுக்கு ஆயுள் வரியை ரத்து செய்து முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டார். இதனால் குஷியடைந்த ஆட்டோ ஓட்டுநர்கள் ஆட்டோக்களில் ஊர்வலமாகச் சென்று சந்திரபாபுவுக்கு நன்றி தெரிவித்தனர்.
அப்போது திடீரென ஆட்டோ டிரைவர் ஒருவரின் காக்கிச் சட்டையை அணிந்து ஆட்டோவைக் கிளப்பினார். இதைக் கண்ட ஆட்டோ ஓட்டுனர்கள் குஷியில் கைதட்டியபடி பின் தொடரும் புகைப்படங்கள் வலைதளங்களில் வைர லாகி வருகிறது.
தேர்தல் நெருங்கும் வேளையில் நமது அரசியல்வாதிகள் இன்னும் என்னென்ன வேஷம் கட்டப் போகிறார்களோ என்ற கிண்டலும் கூடவே பரவிக் கிடக்கிறது.