தமிழக காங்கிரஸ் புதிய தலைவர், செயல் தலைவர்களுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

Stalin greets TN Cong president and new office bearers.

by Nagaraj, Feb 3, 2019, 14:04 PM IST

தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கே.எஸ்.அழகிரி மற்றும் நான்கு செயல் தலைவர்களுக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக காங். தலைவர் பதவியிலிருந்து திருநாவுக்கரசர் நீக்கப்பட்டு கே.எஸ்.அழகிரியை தலைவராக நியமித் துள்ளார் ராகுல் காந்தி. மேலும் எச்.வசந்தகுமார், விஷ்ணுபிரசாத், மயூரா ஜெயக்குமார், கே.ஜெயக்குமார் ஆகியோர் செயல் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கே.எஸ்.அழகிரி மற்றும் செயல் தலைவர்கள் நான்கு பேருக்கும் திமுக சார்பில் மனப்பூர்வ வாழ்த்துக்கள் என்று டிவிட்டரில் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

You'r reading தமிழக காங்கிரஸ் புதிய தலைவர், செயல் தலைவர்களுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து! Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை