சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள அன்னா ஹசாரேவை மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் மத்திய அமைச்சர்கள் நேரில் சந்தித்தனர். லோக்பால் குறித்த உறுதியான முடிவு எடுக்காத வரையில் உண்ணாவிரதத்தை கைவிட முடியாது என ஹசாரே பிடிவாதமாக மறுத்து விட்டார்.
லோக்பால், லோக் ஆயுக்தா சட்டத்தை வலியுறுத்தி சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே மகாராஷ்ரே மாநிலத்தில் உள்ள தமது சொந்தக் கிராமமான மாலேகான் சித்தியில் 7-வது நாளாக உண்ணாவிரதத்தை தொடர்கிறார். 81 வயதான ஹசாரேவின் உடல் நிலையும் மோசமாகி 7 நாட்களில் 4.5 கிலோ எடை குறைந்துவிட்டார்.
முன்னர் லோக்பாலை வலியுறுத்தி தாம் போராடியதை சாதகமாக்கி தேர்தலில் வென்ற பாஜகவும் துரோகம் செய்துவிட்டது என்று நேற்று பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார் ஹசாரே. இதனால் இன்று பிற்பகல் மகாராஷ்டிர முதல்வர் பட்னா விஸ், மத்திய அமைச்சர்கள், ராதாமோகன்சிங்,சுபாஷ் பாம்ரே ஆகியோர் நேரில் சென்று உண்ணாவிரதத்தை கைவிடுமாறு கெஞ்சினர். ஆனால் லோக்பால் குறித்து உறுதியான முடிவைக் கூறினால் மட்டுமே எடுக்கும்வரை உண்ணாவிரதத்தை கைவிடுவேன் என்று ஹசாரே பிடிவாதமாக கூறி விட்டார்.
முதல்வர் பட்னாவிஸ், பாஜக அமைச்சர்கள் வருகை அறிந்து ஹசாரேவின் சொந்தக் கிராமமக்கள் திரண்டு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.