மோடி ஒரு கோழை, எதிர்த்து நின்றால் ஓடி விடுவார் - ராகுல் காந்தி சீண்டல்!

by Nagaraj, Feb 7, 2019, 17:23 PM IST
Share Tweet Whatsapp

பிரதமர் மோடி ஒரு கோழை, எதிரிகளைக் கண்டால் ஓட்டம் பிடித்து விடுவார், என்னுடன் 10 நிமிடம் கூட விவாதிக்க முடியாதவர் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சீண்டியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, டெல்லியில் காங்கிரசின் சிறுபான்மை பிரிவு மாநாட்டில் பங்கேற்று பேசுகையில் பிரதமர் மோடியை சரமாரியாக விமர்சித்தார்.

பிரதமர் மோடி வெறும் பொம்மை தான். அவரை பின்னால் இருந்து இயக்குவது ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் . 2014-ல் மோடியைக் கொண்டு வந்த போது 15 ஆண்டுகளுக்கு அவர் தான் பிரதமர் என்றார்கள். இப்போது 5 ஆண்டுகளில் ஓடப்போகிறார்.

5 ஆண்டு ஆட்சியில் நாட்டின் முக்கிய தன்னாட்சி அமைப்புகளை தங்களுடைய கட்சி அமைப்பாக மாற்றி விட்டது பாஜக . நாட்டிற்கும் மேலானவர்கள் தாங்கள் என்று நினைத்தவர்களுக்கு நாடு தான் பெரிது, நாம் அதற்குக் கீழ்தான் என்பது 3 மாதத்தில் தெரிந்துவிடும்.

நாட்டின் பாதுகாப்பு, ரபேல் விவகாரத்தில் என்னுடன் 10 நிமிடம் விவாதிக்க தயாரா? என்ற சவாலுக்கு மோடி ஓடி ஒழிகிறார். எதிரிகளைக் கண்டால் ஒடி ஒழியும் கோழைதான் மோடி . டோக்லாமில் சீனப் படைகளுடன் நம் படை வீரர்கள் நேருக்கு நேர் மல்லுக்குத் தயாரானபோது சீனா பறந்து அந்நாட்டு அதிபரிடம் கைகட்டி நின்றவர்தான் மோடி .

இந்த 5 ஆண்டு காலத்தில் மோடியின் ஆட்சி அலங்கோலத்தை நன்றாக படித்து விட்டேன். இப்போது தோல்வி பயத்தை மோடியின் முகத்தை பார்த்தாலே தெரிகிறது என ராகுல்காந் சரமாரியாக தாக்கிப் பேசினார்


Leave a reply