உங்கள் உறவே முக்கியம் நள்ளிரவு கடந்தும் ஓட்டலில் கூட்டணி பேச்சுவார்த்தை

அண்ணா சாலையில் இருக்கும் பிரபலமான அந்த ஓட்டலில் நள்ளிரவைக் கடந்தும் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறார் அந்த இளம் தலைவர். தன்னை சி.எம்மாகவே நினைத்துக் கொண்டு உலா வந்து கொண்டிருக்கிறார்.

அவரது கட்சிக்கு சொந்த சமூகத்திலேயே எதிர்ப்பு இருப்பதால், எப்படியாவது பிரதான கட்சிக்குள் இணைந்துவிட வேண்டும் என ஆசைப்படுகிறார். அவரது முந்தைய ரெக்கார்டுகளால் கடுப்பில் இருக்கும் பிரதான கட்சித் தலைவர், அந்த இளம் தலைவரின் பெயரைக் கேட்டாலே எரிந்து விழுகிறார்.

அதை உணராத அக்கட்சியின் மூத்தவர், நான் சொன்னால் அவர் கேட்பார், எங்களோடு கூட்டணிக்கு வாருங்கள் என 'தாலி'யோடு காத்திருக்கிறார். மணமகளை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மணமகன் போல, அந்தத் தலைவர் பேசியதை அதே முகாமில் இருப்பவர்களால் ரசிக்க முடியவில்லை.

மூத்த நிர்வாகியின் தூண்டிலை அடுத்து, அண்ணா சாலையில் உள்ள ஓட்டலுக்கு நள்ளிரவு வந்திருக்கிறார் இளம் தலைவர். பிரதான கட்சியின் மருமகனும் அதே ஓட்டலுக்கு வந்திருக்கிறார்.

நள்ளிரவைக் கடந்தும் பேச்சுவார்த்தை முடியவில்லையாம். 'அந்தத் தரப்பு எங்களுக்காக எந்த உதவியையும் செய்து தரத் தயாராக இருக்கிறது. நாங்கள் உங்களைத் தான் விரும்புகிறோம். எத்தனை சி கொடுத்தாலும் உங்கள் உறவே முக்கியம்' எனக் கெஞ்சினாராம் அந்த இளம் தலைவர்.

இந்த சந்திப்பு குறித்த தகவலையும் வெளியில் கசிய விட்டிருக்கிறார் அந்தத் தலைவர். இதன்மூலம் தங்கள் செல்வாக்கைக் காட்ட முயற்சிக்கிறாராம்.

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

மேலும் செய்திகள்

Due-lunar-eclipse-Tirupati-temple-closes-July-16th-night-7-next-morning-5
சந்திர கிரகணத்தையொட்டி ஜூலை 16ம் தேதி இரவு 7 மணி முதல் மறுநாள் காலை 5 மணி வரை திருப்பதி கோவில் நடை அடைக்கப்படும் என தேவஸ்தானம் அறிவிப்பு..!
June-26---International-day-against-drug-abuse
தள்ளாடும் இந்தியா; தவிர்ப்பது எங்ஙனம்? (ஜூன் 26 - சர்வதேச போதை மருந்து எதிர்ப்பு நாள
Karnataka-govt-apply-permission-for-Mekedatu-dam-building
மேகதாதுவில் அணை கட்ட சுற்றுச்சூழல் அனுமதி தருக..! மத்திய அரசின் கதவை தட்டும் குமாரசாமி
RBI-deputy-governor-Viral-Acharya-quits-six-months-before-his-term-ends
ரிசர்வ் வங்கி துணை கவர்னர் திடீர் ராஜினாமா ஏன்?
Ongc-pipeline-gas-leakage-in-Andhra
ஓ.என்.ஜி.சி பைப்லைனில் கேஸ் கசிவு..! கிராம மக்கள் ஆவேசம்
Pathetic-incident-in-andhra
16 வயது சிறுமியை சீரழித்த கொடூரன்கள்..! ஆந்திராவில் நிகழ்ந்த பரிதாபம்
Death-toll-touches-128-Muzaffarpur-due-to-encephalitis
பீகாரில் 128 குழந்தைகளை கொன்ற மூளைக்காய்ச்சல்
30-lakhs-worth-Redwood-trafficking-Kaalahasthi
காளஹஸ்தியில் செம்மரக்கட்டைகள் கடத்தல்..! ரூ.30 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல்
Telengana-Road-accident-4-persons-death
தெலுங்கானா : தர்ஹாவிற்கு சென்று திரும்பிய 4 பேர் விபத்தில் சிக்கி பலி
kerala-supply-20-lakh-litre-water-tamilnadu--Edappadi-government-rejected
கேரள தண்ணீர் வேண்டாம்: எடப்பாடி அவசர மறுப்பு, பினராயிக்கு ஸ்டாலின் நன்றி

Tag Clouds