பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாதிகள் முகாமை அழித்த போது கைது செய்யப்பட்ட இந்திய விமானி அபிநந்தனை இன்று பாகிஸ்தான் விடுதலை செய்கிறது. வாகா எல்லையில் ஒப்படைக்கப்படும் அவரை வரவேற்க பெற்றோர்கள் அங்கு விரைந்துள்ளனர்.
புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடியாக சர்ஜிகல் ஸ்டிரைக்-2 ஐ இந்திய விமானப் படை நடத்தியது. இந்நடவடிக்கையின் போது இந்திய போர் விமானங்கள் 2-ஐ பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியது.
மேலும் இந்திய விமானி அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவம் கைது செய்தது. இதனால் இரு நாடுகளிடையே போர் வெடிக்கும் அபாயம் எழுந்தது.
இந்நிலையில் இருநாடுகளிடையே அமைதியை ஏற்படுத்தும் விதமாக அபிநந்தனை விடுதலை செய்வதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அறிவித்திருந்தார். அவரது அறிவிப்பு ஒட்டுமொத்த தேசத்தையே பெரும் மகிழ்ச்சி அடைய வைத்தது.
இதனைத் தொடர்ந்து இன்று வாகா எல்லையில் இந்திய ராணுவத்திடம் அபிநந்ந்தன் ஒப்படைக்கப்பட உள்ளார். அவரை வரவேற்க பெற்றோர்கள் வாகா எல்லைக்கு சென்றுள்ளனர்.