விமானி அபிநந்தன் யார் என்பது குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன.
பால்கோட் தாக்குதலை அடுத்து இன்று இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் விமானப்படை அத்துமீறி நுழைந்தது. இதனை இந்திய வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். அப்போது நடந்த சண்டையில் இந்திய விமானப்படையின் விமானம் ஒன்று பாகிஸ்தான் எல்லையோரக் கிராமத்தில் கீழே விழுந்தது. அதில் இருந்த விமானி அபிநந்தன் வர்த்தமான் என்பவரைப் பாகிஸ்தான் ராணுவம் கைது செய்தது. தற்போது அபிநந்தன் வர்த்தமான் யார் என்பது குறித்த விவரங்கள் தெரியவந்துள்ளது. அதன்படி, அபிநந்தன் தமிழகத்தைச் சேர்ந்தவர். திருவண்ணாமலை மாவட்டம் திருப்பணவூர்தான் இவரது சொந்த ஊர்.
இவரின் முழுப்பெயர் அபிநந்தன் வர்த்தமான். இவரின் அப்பாவின் பெயர் வர்த்தமான். இவரும் விமானப்படையில் விமானியாக இருந்தவர் தான். இதனாலேயே இந்தியாவுக்கு சேவை செய்ய வேண்டும் என விமானியாக சேர்ந்தார். 2004ம் ஆண்டு முதல் இந்திய விமானப்படையில் இணைந்து சேவையாற்றி வருகிறார். இவர்கள் பூர்வீகம் திருண்ணாமலை அருகே திருப்பனவூர் கிராமம். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். அபிநந்தன் குடும்பத்தினர் சென்னை மாடம்பாக்கத்தில் வசித்து வருகின்றனர். பூர்வீகம் திருவண்ணாமலை என்றாலும் இவர் படித்தது, வளர்ந்தது, விமானப்படைக்கு முதற்கட்ட பயிற்சி எடுத்தது எல்லாம் சென்னையில்தான்.
விமானப்படையில் சேர்ந்தப் பிறகு வடமாநிலங்களில் பல இடங்களில் ராணுவ முகாம்களில் பணியாற்றி இருக்கிறார். தற்போது இவர்கள் குடும்பம் டெல்லியில் வசித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.