பாகிஸ்தானால் சிறைப்பிடிக்கப்பட்டு ஒரே நாளில் இந்தியா முழுவதும் வீரத்திருமகன் என ஹீரோவாக கொண்டாடப்பட்ட அபிநந்தனின் 'கொடுவா மீசை' ஸ்டைலும் இளை ஞர்களை வசீகரித்துள்ளது. சலூன்களில் தற்போது இந்த ஸ்டைல் மீசை வைக்க ஏராளமான இளைஞர்கள் படையெடுத்துள்ளனர்.
சினிமாப் படங்களில் நடிகர்களின் கெட்டப்பை அப்படியே காப்பி அடிப்பது தான் நமது இளைஞர்களின் பொழுது போக்காக இருந்தது. தற்போது பாகிஸ்தான் விமானத்தை விரட்டிச் சென்று தீரத்துடன் போரிட்டு வீழ்த்தி, அந்நாட்டால் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய விமானி அபிநந்தனை ஹீரோவாக கொண்டாடி வருகின்றனர் இந்திய மக்கள்.
இளைஞர் பட்டாளமோ அபிநந்தனின் அந்த நீண்ட வளைந்து நெளிந்த கொடுவா ஸ்டைல் மீசையால் வெகுவாக கவரப்பட்டுள்ளனர்.
பெங்களூரு, டெல்லி, மும்பை என பெருநகரங்கள் மட்டுமின்றி அபிநந்தனின் மீசைக்கு அடிமையாகி அதே ஸ்டைல் மீசை, வைக்க சலூன்களுக்கு படையெடுத்துள்ளனர்.
பஞ்சாப் மாநிலத்திலோ இந்த ஸ்டைல் மீசை, தலை அலங்காரம் செய்து கொள்பவர்களுக்கு ஸ்பெஷல் டிஸ்கவுன்ட் அறிவிப்பும் செய்துள்ளனர்.