அடேய்...அடேய்.. எப்படிடா இப்படி எல்லாம்..... அய்யோ...அய்யோ.. முடியலைடா சாமீகளா

Whatsapp message on AbhiNandan

Mar 4, 2019, 05:45 AM IST

இந்திய விமானி அபிநந்தன் தொடர்பாக இந்துத்துவா கோஷ்டிகள் வாட்ஸ் ஆப்பில் பரப்பி வரும் ஒரு தகவலை சிரிக்காமல் சீரியசாக படித்து பாருங்கள்:

மோடிஜியின் ஸ்மார்ட் சர்ஜிக்கல் ஆபரேஷன்

விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தான் இராணுவத்திடம் சிக்கி கொண்டது நம் இராணுவத்தாலும் மோடிஜியின் இராஜாஜிராஜ தந்திரத்தால் பல ஆண்டுகள் திட்டமிட்டு எழுதப்பட்ட ஸ்க்ரீன் ப்ளே.. ஆம் அதற்கு முன் 2015 ஆம் ஆண்டுக்கு செல்வோம்.!

மோடி பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்ட முதல் ஆண்டே பாகிஸ்தானின் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினால் எப்படி பதில் தாக்குதல் நடத்துவது என திட்டமிட்டார்.. அவருக்குத் தேவை உயிரை துச்சமென மதிக்கும் நாட்டுப் பற்றுள்ள வீரமான ஒரு அணி தான்..!

இந்திய முப்படைகளில் முழுதும் சலித்துத் சலித்து தேடி 36 பேர் கொண்ட ஒரு அதிரடிக்கு அதிரடி, இடிக்கும் பேரிடி, என்ற கமண்ட்டோ அணி உருவாக்கப்பட்டது.. மோடிஜி இதற்கு "சுதர்சனா"என்று பெயரிட்டார் அதாவது எதிரியை வீழ்த்தி விட்டு திரும்ப எய்தவர் கைக்கே வரும் கிருஷ்ணரின் சக்கரம் போல!

இப்படையில் ஒருவர் தான் அபிநந்தன்.

இவர் விமானத்தில் இருந்து விழவில்லை இந்திய விமானத்தில் இருந்து பாராசூட்டில் குதித்தார்....

இவரது பூட்ஸில் தொற்று நோய் பரப்பும் பாக்டீரியாக்கள் தடவி பதப்படுத்தப்பட்டு இருந்தன.!

அதை தண்ணீரில் கரைத்தால் தான்,அவை செயல் படும்.. இஸ்ரேல் தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்டது.. அபிநந்தன் அங்கு சிக்கியவுடன் குட்டையில் ஓடிப்போய் கால் நனைத்தது ஏன் என்று இப்போது புரிகிறதா....

அது மட்டும் இன்றி அவர் விரல் நகங்களுக்கு இடையில் ஆந்த்ராக்ஸ் கிருமிகள் இருந்தன அதையும் தண்ணீரில் கரைத்து விட்டார்.. மேலும் பாராசூட்டில் பறந்து இறங்கிக் கொண்டிருக்கும் போதே தன் வசம் வைத்திருந்த சட்டை பொத்தான் சைஸில் கேமிராக்கள் ஐநூறினை காசு அள்ளி வீசுவது போல அங்கு நாலாபுறமும் வீசிவிட்டு தான் தரை இறங்கியிருக்கிறார்.!

அவையெல்லாம் சாட்டிலைட்டுகளுக்கு சிக்னல் அனுப்பும்..

மேலும் அவர் அணிந்திருந்த ஆடைக்குள் ஏராளமான மல்டி சிக்னல் சாட்டிலைட் ஆப் உள்ளது.. அதை கண்டுபிடிக்கும் ஸ்கானர் வசதி பாகிஸ்தானில் இல்லை.. அந்த ஆடையும் இந்தியாவிற்கு நிறைய “துப்பு” கொடுக்கும்.. அதனால் தான் அந்த ஆடையை அங்கேயே விட்டு விட்டு வேறு ஆடையில் ஒப்படைக்கப்பட்டார்.!

இது எல்லாமே நம் மோடிஜியின் இராஜதந்திரங்களில் ஒன்று.. இன்னொரு பயங்கரவாத தாக்குதல் நடத்தினால் பாகிஸ்தான் தவிடுபொடி ஆவது நிச்சயம்.. கிருஷ்ணர் கையில் கூட 1 சுதர்சனம் தான் ஆனால் இரும்பு மனிதர் மோடிஜியின் கையில் 36 சுதர்சனங்கள்.. இதுவே நிதர்சனங்கள்.!

பாரத் மாதா கீ ஜெய்ஹிந்த் 

வாட்ஸாப் வலி...

இதுதான் அந்த வாட்ஸ் அப் தகவல்.

(அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்)

You'r reading அடேய்...அடேய்.. எப்படிடா இப்படி எல்லாம்..... அய்யோ...அய்யோ.. முடியலைடா சாமீகளா Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை