கர்நாடகா: மகதாயி நதிநீர் பங்கீட்டு பிரச்னை காரணமாக கர்நாடகா மாநிலத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
கர்நாடகா மாநிலத்தில் இன்று முழு அடைப்பு காரணமாக தமிழக பேருந்துகள் எல்லைகளில் நிறுத்தப்பட்டுள்ளன. மகதாயி நதிநீர்ப் பங்கீட்டு பிரச்சனையில் பிரதமர் தலையிடக் கோரி கன்னட அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகின்றன. இதில் பங்குகொள்ளும்படி கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
மகதாயி நதியில் இருந்து கால்வாய் மூலம் குடிநீர் கொண்டு செல்லும் கலசா - பண்டூரி திட்டத்துக்கு, கோவா அரசு தண்ணீர் திறக்க வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது. இதில், கன்னட அமைப்புகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.