எந்தெந்த தொகுதிகளில் எத்தனை கட்ட வாக்குப் பதிவு?

EC conduct LS Polls in 7 Phase

by Mathivanan, Mar 10, 2019, 19:16 PM IST

லோக்சபா தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக ஏப்ரல் 11-ந் தேதி முதல் மே 19-ந் தேதி வரை நடைபெறுகிறது.

இது தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா டெல்லியில் செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது:

20 மாநிலங்களில் 91 தொகுதிகளுக்கு ஏப்ரல் 11ந் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது

13 மாநிலங்களில் 97 தொகுதிகளுக்கு ஏப்ரல் 18-ல் 2-ம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

14 மாநிலங்களில் 115 தொகுதிகளுக்கு ஏப்ரல் 23-ந் தேதி 3-ம் கட்ட வாக்குப் பதிவு

9 மாநிலங்களில் 71 தொகுதிகளுக்கு ஏப்ரல் 29-ல் 4-ம் கட்ட வாக்குப்பதிவு

7 மாநிலங்களில் 51 தொகுதிகளுக்கு மே 6-ல் 5-ம் கட்ட வாக்குப் பதிவு

7 மாநிலங்களில் 59 தொகுதிகளுக்கு மே 12-ல் 6-ம் கட்ட வாக்குப் பதிவு

7 மாநிலங்களில் 59 தொகுதிகளுக்கு மே 17-ல் இறுதி கட்ட வாக்குப் பதிவு

அனைத்து தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் மே 23-ம் தேதி எண்ணப்படும்.

தமிழகம், புதுவையில் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 18-ல் தேர்தல்

தமிழகத்துடன் ஆந்திரா, அருணாச்சலப் பிரதேசம், கோவா, குஜராத், ஹரியானா, இமாச்சல், கேரளா, மேகலாயா, மிசோரம், நாகாலாந்து, பஞ்சாப், சிக்கிம், தெலுங்கானா, உத்தரகாண்ட், அந்தமான், தாதர் நாகர் காவேலி, டாமன் டையூ, லட்சத்தீவு, புதுடெல்லி, புதுச்சேரி, சண்டிகார் ஆகிய 22 மாநிலங்கள் & யூனியன் பிரதேசங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

 

You'r reading எந்தெந்த தொகுதிகளில் எத்தனை கட்ட வாக்குப் பதிவு? Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை