இந்திய வரலாற்றில் இந்த ஏப்ரல் மாதம் ஒரு கருப்பு மாதம். இந்தியர்கள் யாரும் பிரிட்டன் இராணுவத்தின் ஜெனரல் டயரையும், அவரால் பஞ்சாப் மாநிலம் ஜாலியன் வாலபாக் பகுதியில் நடந்த சம்பவத்தையும் அவ்வளவு எளிதில் மறந்துவிட மாட்டார்கள். ஆம் ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்து 100 ஆண்டுகள் முடிவடைய போகிறது. இன்னும் மூன்று நாள்களில் 100 ஆண்டுகள் முடிய போகிறது. இந்நிலையில், பிரிட்டன் வாழ் இந்திய எம்.பி. வீரேந்திர சர்மா அந்நாட்டு பாராளுமன்ற மக்கள் சபையில் கடந்த 2017-ம் ஆண்டில் ஒரு தனிநபர் மசோதாவை கொண்டுவந்து விவாதம் நடத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
அதில் "இந்த கோர படுகொலைக்கு படுகொலைக்கு இங்கிலாந்து அரசு மன்னிப்பு கேட்க வேண்டும். அமைதியுடன் ஒன்று கூடிய அப்பாவி மக்களை கொடூரமாக கொன்று குவித்ததை ஏற்க முடியாது. படுகொலை தினத்தை நினைவு தினமாக அறிவித்து அனுசரிக்க வேண்டும்" என ஐந்து உறுப்பினர்களின் ஆதரவோடு கூறியிருந்தார்.
இந்நிலையில் இதற்கு தற்போது பதிலளித்துள்ள இங்கிலாந்து பிரதமர் தெரசா மே, "ஜாலியன் வாலாபாக் படுகொலை பிரிட்டன் ஆட்சி காலத்தில் நடந்த நீக்க முடியாத அவமானகரமான கரை. இதற்கு இந்த தருணத்தில் வருத்தத்தை பதிவு செய்து கொள்கிறேன். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் வருத்தங்களை தெரிவித்து கொள்கிறோம்" எனக் கூறியுள்ளார். வருத்தம் தெரிவித்தார் ஒழிய எம்பி வலியுறுத்தி கேட்ட மன்னிப்பு குறித்து தெரசா மே குறிப்பிடவில்லை.