டாடா கன்சல்டன்சி (டிசிஎஸ்) நிறுவனத்தின் 50-வது ஆண்டு விழாவையொட்டி ஊழியர்களுக்குப் பரிசுப் பொருள் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், பரிசுப் பொருளை அறிந்த ஊழியர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
நாட்டின் முன்னணி மென்பொருள் தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீஸ் நிறுவனம் தனது 50வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. அதனைக் கொண்டாடும் வகையில், உலகம் முழுவதும் உள்ள தன் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்க்குப் பரிசுப் பொருள்கள் வழங்க முடிவு செய்தது. இதனையடுத்து, நிறுவனத்தின் சார்பாகப் பெரிய ரொக்க போனஸ் அல்லது டாடா தயாரிப்புகளான நகைகள், வீடுகள், கார்கள் போன்றவை வழங்கப்படும் என்று நீண்ட நாள்களாக எதிர்பார்த்து கார்த்திருன்தனர் டாடா நிறுவனத்தின் உயர் நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள். ஆனால், அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
50வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் விதமாக அனைத்து ஊழியர்க்கும், டாடா ஸ்டேபல் தயாரிப்பான டைட்டன் வாட்ச் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. நகைகள், வீடுகள், கார்கள் போன்ற பரிசுப் பொருள்களை எதிர்பார்த்துக் காத்திருந்த ஊழியர்களுக்கு டைட்டன் வாட்ச் கொடுத்திருப்பது மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது என அந்நிறுவனத்தின் ஊழியர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.