உத்தர பிரதேசத்தில் ரயில் பெட்டிகள் தடம் புரண்டதால் நடுவழியில் பயணிகள் பரிதவிப்பு

Apr 20, 2019, 09:48 AM IST

உத்தர பிரதேச மாநிலம் கான்புர் அருகே பூர்வா எக்ஸ்பிரஸ் ரயிலின் 5 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் 3 பயணிகள் காயம் அடைந்தனர்.

ஹவுராவில் இருந்து டெல்லி செல்லும் பூர்வா எக்ஸ்பிரஸ் ரயில், 900 பயணிகளுடன் அதிகாலை ஒரு மணியளவில் உத்தர பிரதேச மாநிலம் கான்புர் பகுதி ரூமா கிராமத்தின் அருகே சென்றுக் கொண்டிருந்தது. அப்போது திடீரென அந்த ரயில் பெட்டிகள் தடம் புரண்டது. தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு முயற்சியில் ஈடுபட்டனர்.

ரயில் பெட்டிகள் தடம் புரண்ட சம்பவத்தில் 3 பேருக்கு காயம் ஏற்பட்டது. அதில் ஒருவர் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல். இருப்பினும், ரயில் தடம் புரண்டதால் அப்பாதையில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பயணிகள் விடிய விடிய நடுவழியில் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியில் இணைந்த உதவியாளர்- அதிர்ச்சியில் ஸ்மிருதி இரானி...

Get your business listed on our directory >> - https://directory.thesubeditor.comMore India News

அதிகம் படித்தவை