கடலாடி பகுதியில் நிலவும் கடும் தண்ணீர் பஞ்சத்தால், கிராம மக்கள் கிணறுக்கு பூட்டு போட்டு காவல் காத்து நீரை பயன்படுத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியை அடுத்து உள்ள சிக்கல் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதி மக்கள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது பாண்டியன் ஊருணி. 25 ஏக்கர் பரப்பிலான ஊருணியில் கிராம மக்கள் கிணறுகளை தோண்டி பயன்படுத்தி வருகின்றனர். ஒவ்வொரு குடும்பத்தினரும் தனித்தனியாக கிணறு தோண்டி அவற்றை பயன்படுத்தி வருகின்றனர்.
25 ஏக்கர் பரப்பிலான ஊருணியில் வசதியுள்ளவர்கள் மட்டும் பத்தாயிரம் ரூபாய் செலவு செய்து கிணறு தோண்டி கொள்கின்றனர். பத்தாயிரம் ரூபாய் செலவு செய்து கிணறு தோண்டி கொள்கின்றனர். அப்படி ஊருணியில் கிணறு தோண்டியவர்கள் அதற்கு முள்வேலி அமைத்து பூட்டி வைத்துள்ளனர். தேவைப்படும் போது பூட்டை திறந்து முள்வேலிக்குள் சென்று கிணற்றிலுள்ள நீரை பயன்படுத்தி கொள்கின்றனர். அதேசமயம் வசதி இல்லாதவர்கள் நிலைமை மிகவும் பரிதாபமாக உள்ளது.