வாக்குப்பதிவு சதவீதம் தெரிய வேண்டுமா? உதவுகிறது தேர்தல் கமிஷன் செயலி!

To know vote percentage download election commission apps.

Apr 20, 2019, 10:39 AM IST

தேர்தலில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கை குறித்த விவரங்களை செய்தி ஊடகங்கள் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன. இதில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வண்ணம் தேர்தல் ஆணையம் ஸ்மார்ட்போன் செயலி ஒன்றை வெளியிட்டுள்ளது.
தற்போது நடைபெற்று வரும் மக்களைவை பொதுத் தேர்தல், சில மாநில சட்டப்பேரவை தேர்தல்களை முன்னிட்டு கடந்த மார்ச் மாதம் முதல் தேர்தல் ஆணையம், தேர்தல் விழிப்புணர்வு மற்றும் வாக்களிக்க ஊக்குவிக்கும் பதிவுகளை ட்விட்டர் மூலம் செய்து வந்தது. தேர்தல் ஆணையத்தின் முயற்சி காரணமாக ட்விட்டர் 2019 இந்திய நாடாளுமன்ற தேர்தலுக்காக சிறப்பு எமோஜி (emoji) ஒன்றையும் அறிமுகம் செய்துள்ளது.


வாக்களித்தோர் எண்ணிக்கை விவரங்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் இந்திய தேர்தல் ஆணையம் Voter Turnout என்ற செயலியை வெளியிட்டுள்ளது. கூகுள் ப்ளே ஸ்டோரில் இந்தச் செயலி தரவிறக்கம் செய்துகொள்ள கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 4.4 கிட்காட் மற்றும் அதற்கு மேற்பட்ட வடிவிலான ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்களில் இந்தச் செயலி இயங்கும்.


தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடமிருந்து பெறப்படும் வாக்கு பதிவு விவரங்களைக் கொண்டு கணிக்கப்படும் மொத்த எண்ணிக்கை இந்தச் செயலியில் தரப்படும். தேர்தல் காலங்களில் மாநிலங்கள் வாரியாக, மக்களவை தொகுதி வாரியாக மற்றும் சட்டப்பேரவை தொகுதி வாரியாக வாக்குப் பதிவு விவரங்களை ஆண் வாக்காளர்கள் மற்றும் பெண் வாக்காளர்கள் பிரிவுகளின் அடிப்படையில் இதன் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.

தேர்தல் பணிக்காக வந்த அதிகாரி மாரடைப்பால் மரணம்

You'r reading வாக்குப்பதிவு சதவீதம் தெரிய வேண்டுமா? உதவுகிறது தேர்தல் கமிஷன் செயலி! Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை