`உங்கள் மீதான கோபத்தை என் மீது காட்டுகிறார் - மோடி கேள்விக்கு பதிலளித்துள்ள ட்விங்கிள் கண்ணா

மக்களவை தேர்தல் நடந்து கொண்டிருக்கும் நிலையில், அரசியல் அல்லாத கேள்விகள் கொண்ட நேர்காணலை பிரதமர் மோடியுடன் நடிகர் அக்சய் குமார் நடத்தியுள்ளார்.

இந்த பேட்டியின் போது பிரதமர் மோடி பல்வேறு சுவாரசிய தகவல்களையும் பகிர்ந்து கொண்டார். ``நான் சன்னியாசியாக வேண்டும் என்றுதான் நினைத்தேன், பிரதமராக வேண்டும் என்று ஒரு போதும் நினைத்தது இல்லை. எனக்கு கோபம் வராததை பார்த்து மக்கள் ஆச்சர்யபடுகிறார்கள். கோபப்படும் அளவுக்கு நான் எந்த சூழலையும் உருவாக்கி கொள்ளவில்லை. எனக்கு கோபம் வரும் அதை நான் ஒருபோதும் வெளிக்காட்டியதில்லை. எம்.எல்.ஏ ஆவதற்கு முன்பு வரை எனக்கு வங்கி கணக்கு கிடையாது" என்பது போன்ற பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். இது இன்று காலை முதல் சமூகவலைதளங்களில் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

இதற்கிடையே இந்த பேட்டியின் இடையே பிரதமர் மோடி அக்சய் குமாரிடம் ஒரு ஜோக் சொல்லுவார். இது தற்போது ட்ரெண்ட் ஆகியுள்ளது. அதில், `` நான் சமூகவலைதளங்களைத் தொடர்ந்து கவனித்துக்கொண்டுதான் உள்ளேன். நாட்டில் என்ன நடக்கிறது என்று அனைத்து விஷயங்களும் எனக்குத் தெரியும். ட்விட்டரில் உங்களையும், உங்கள் மனைவி ட்விங்கிள் கண்ணாவையும் பின் தொடர்ந்து வருகிறேன். ட்விங்கிள் என் மீது கோபத்தில் உள்ளார் என நினைக்கிறேன். உங்கள் வீட்டில் எப்போதும் அமைதி மட்டுமே நிலவும் ஏனெனில் உங்கள் மனைவிக்குக் கோபம் வந்தால் அவை அனைத்தையும் என் மீது காட்டி விடுகிறார்’ என மோடி அக்சய்யை பார்த்து கூற அவர் சிரிப்பார்.

இந்த காட்சிகளை பாஜக தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட அதை டேக் செய்த அக்சய்யின் மனைவி ட்விங்கிள் கண்ணா, `இதை நான் பாசிட்டீவாகவே பார்க்கிறேன். பிரதமர் மோடிக்கு என்னைத் தெரிந்திருப்பது மட்டுமல்லாது நான் பதிவிடும் கருத்துகளையும் படித்துள்ளார்’ என பதில் கொடுத்துள்ளார்.

விதிகளை மீறும் பிரதமர் மோடி...! தேர்தல் ஆணையம் சாட்டையை சுழற்றுமா?

Advertisement
More India News
people-forced-to-wage-dharma-yudh-against-centre-says-chidambaram
பாஜக அரசை எதிர்த்து மக்கள் தர்ம யுத்தம்.. ப.சிதம்பரம் பேட்டி
43-people-killed-in-factory-fire-in-delhi-kejriwal-orders-probe
டெல்லி தொழிற்சாலை தீ விபத்தில் 43 பேர் பலி.. விசாரணைக்கு கெஜ்ரிவால் உத்தரவு..
in-up-under-bjp-government-women-are-not-safe-says-mayawati-akilesh
உ.பி.யில் பாஜக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை.. மாயாவதி, அகிலேஷ் குற்றச்சாட்டு
congress-general-secretary-priyanka-gandhi-meets-family-of-unnao-rape-victim
உன்னாவ் பெண் குடும்பத்திற்கு பிரியங்கா காந்தி நேரில் ஆறுதல்..
petition-filed-in-supreme-court-seeking-sc-monitored-sit-enquiry-into-telangana-encounter
என்கவுன்டரை ஆதரித்த ஜெயாபச்சன் மீது நடவடிக்கை கோரி மனு..
national-human-rights-commission-nhrc-team-arrives-in-hyderabad
போலீஸ் என்கவுன்டர்.. மனித உரிமை கமிஷன் குழு ஐதராபாத் வந்தது..
jharkhand-voting-in-2nd-phase-of-assembly-poll
ஜார்கண்டில் 2வது கட்ட வாக்குப்பதிவு மும்முரம்.. முதல்வர் வாக்களிப்பு..
unnao-rape-survivor-dies-day-after-being-set-ablaze
எரிக்கப்பட்ட உன்னாவ் பெண்.. டெல்லி மருத்துவமனையில் சாவு..
pm-modi-uddhav-thackeray-meet-for-first-time-after-sena-chief-became-cm
உத்தவ் முதல்வரான பின்பு மோடியுடன் முதல் சந்திப்பு..
cyberabad-police-commissioner-sajjanar
என்கவுன்ட்டர் நடத்திய  போலீஸ் கமிஷனர் விசி சஜ்னாருக்கு பாராட்டு குவிகிறது.. சம்பவம் பற்றி பரபரப்பு பேட்டி..
Tag Clouds