தளபதி 63 படத்தில் ஷாருக் கான் வில்லனா? என்ன சொல்கிறது படக்குழு

Shah Rukh Khan a part of Thalapathy 63 or not

by Sakthi, Apr 24, 2019, 19:36 PM IST

விஜய் - அட்லீ கூட்டணியில் மூன்றாவதாக உருவாகும் தளபதி 63 படம் குறித்து நாள்தோறும் புதுபுது தகவல்கள் வெளியாகி வருகின்றன. தளபதி 63 படப்பிடிப்பில் ஒருவருக்கு அடிப்பட்டுவிட்டது. அட்லீ மீது துணை நடிகை புகார், விஜய் அக்காவாக பிரபல குணசித்திர நடிகை என புதுபுது தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இன்றும் அப்படியொரு செய்தி வெளியாகியுள்ளது.

ஷாருக் கான்


சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற சென்னை - கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது இயக்குநர் அட்லி - பாலிவுட் ஸ்டார் ஷாருக்கான் இருவரும் அருகருகே அமர்ந்திருந்த புகைப்படம் வைரலானது நியாபகம் இருக்கிறதா?


ஷாருக் கான்

ரஜினி நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் எந்திரன் படம் வெளியான நேரத்தில் அதன் இந்தி ரீமேக்கான ரோபோட் படத்தில் ஷாருக்கான் தான் நடிக்க இருந்தது. தவிர, ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் எண்டர்டெயிண்ட்மெண்ட் நிறுவனம் தான் தயாரிக்கவும் இருந்தது. அந்த நேரத்தில் ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்தவர் அட்லீ. அப்பொழுது ஷாருக்கானுடன் பேசுவதற்கான வாய்ப்பு அட்லீக்கு கிடைத்தது. அந்த நட்பு இன்று வரை தொடர்வதாக சொல்கிறார்கள். பிஸியான ஷூட்டிங் நேரத்திலும் ஷாருக்கை சந்தித்து, அவருடன் கிரிக்கெட் மேட்சை பார்த்து மகிழ்ந்திருக்கிறார் அட்லீ. இந்த நட்பு தான் தளபதி 63 படத்தில் ஷாருக்கான் நடிக்க ஒப்பு கொண்டதாக கூறப்படுகிறது.

தளபதி 63 படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்காக சென்னையில் பிரமாண்டா செட் போடப்பட்டது. விறுவிறுப்பான கால்பந்து மேட்ச் தான் தளபதி 63 படத்தின் கிளைமாக்ஸ் காட்சி. இந்த காட்சியில் ஷாரருக் கான் ஓரிரு நிமிடங்கள் தோன்றுவாராம். அதுவும் நெகட்டிவ் ரோலில். படத்தில் 15 நிமிடங்கள் அவர் தோன்றுவார் என்றும் கூறப்பட்டது.

இதுபற்றி தளபதி 63 படக்குழுவில் சிலரிடம் கேட்டபோது, ``ஷாருக் கான் எல்லாம் நடிக்கவில்லை. இது தவறான தகவல். சென்னையில் தளபதி 63 சூட்டிங் முடிந்துவிட்டது. தற்போது படப்பிடிப்புக்காக டெல்லிக்கு செல்கிறோம்’’ என்றார்கள்.

தளபதி 63 படப்பிடிப்பில் விபத்தில் சிக்கிய நபருக்கு விஜய் கொடுத்த 'ஷாக்'

You'r reading தளபதி 63 படத்தில் ஷாருக் கான் வில்லனா? என்ன சொல்கிறது படக்குழு Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை