தளபதி 63 ஷூட்டிங் கடந்த சில நாள்களாக சென்னை பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டையில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் நடைபெற்று வந்தது. படப்பிடிப்பின் போது துணைநடிகை கிருஷ்ணாதேவிக்கும் படக்குழுவில் சிலருக்கும் தகராறு ஏற்பட்டு அது போலீஸ் நிலையம் வரை சென்றுவிட்டது. மேலும் இயக்குநர் அட்லீ தன்னை தகாத வார்த்தையால் பேசியதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கிருஷ்ணா தேவி புகார் மனு அளித்தார்.
அன்று என்னதான் நடந்தது?
போலீஸில் புகார் கொடுத்துள்ள 51 வயது துணை நடிகை கிருஷ்ணா தேவி முப்பது வருடங்களுக்கு மேல் தமிழ் சினிமாவில் நடிக்கிறார். பொதுவாக படத்தில் ஓரிரு காட்சிகளில் நடிக்கும் துணை நடிகர்களுக்கு படப்பிடிப்பின்போது போதுமான அடிப்படை வசதி இருக்காதாம். உணவு உள்ளிட்ட விஷயங்களிலும் துணை நடிகர்கள் பாரபட்சத்துடனே நடத்தப்படுவார்களாம். அப்படியிருக்க அட்லீயில் படப்படிப்பு தளத்தில், மூன்று நாளாக பணிப்புரியும் கிருஷ்ணா தேவிக்கு யாரோ சாப்பிட்ட மீதமுள்ள உணவை கொடுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ணா தேவி அட்லீயின் உதவி இயக்குநர்களிடம் வாக்குவாதம் செய்துள்ளார். அவர்கள் இவரிடம் அசிங்கமான வார்த்தைகள் பேசியுள்ளனர். அனைத்தையும் பார்த்து அமைதியாக உட்கார்ந்திருந்த அட்லீ, `காசு வீசி எறிங்க.. எடுத்துட்டு போவாங்க’ என்று தெரிவித்தாராம். கிருஷ்ணா தேவி தான் மேற்சொன்ன விஷயங்களை போலீஸிலும் ஊடகங்களிலும் தெரிவித்துள்ளார். இது பற்றி அட்லீ தரப்பில் இருந்து எந்த விளக்கம் என்பதால் ஒருதலையாக தான் செய்தி பதிவிட முடியும்.
அட்லீ துணை நடிகையை தகாத வார்த்தைகளில் பேசினாரா? உணவுக்காக ஏற்பட்ட சண்டையின் பின்னணி
Advertisement