தேவராட்டம் சாதிப் படம் தான் இயக்குநர் பொய் சொல்றார்.. போட்டு உடைத்த தயாரிப்பாளர்

by Sakthi, Apr 24, 2019, 20:38 PM IST

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கவுதம் கார்த்திக், மஞ்சிமா மோகன், சூரி, ஜகபதி பாபு, ராகுல் தேவ் ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் தேவராட்டம். வரும் மே 1ம் தேதி தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வெளியாகவுள்ள இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு இன்று நடந்தது.

தேவராட்டம்

தேவராட்டம் என்று பெயர் கேட்டதும் சமூக வலைத்தளங்களில் இது ஒரு சாதி படம் என்று தொடர்ந்து விமர்சிக்க ஆரம்பித்துவிட்டனர். உண்மையிலேயே தேவராட்டம் என்றால் என்ன என்று இன்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் எழுத்தாளரும் நடிகரும் ஆன வேல.ராமமூர்த்தி விளக்கம் கொடுத்துள்ளார்.

தேவராட்டம்

அவர் பேசும்போது, "எனக்கு நல்ல அடையாளத்தை கொம்பன் படம் மூலமாக ஏற்படுத்தித் தந்த தம்பி முத்தையாவிற்கு நன்றி. அவர் தொடர்ந்து தன் படங்களில் குடும்ப உறவுகளைப் பற்றிப் பதிவு செய்து வருகிறார். இந்த தேவராட்டம் படம் அக்கா தம்பி பாசத்தை அடிப்படையாக கொண்டது. அக்காவின் பாசம் அம்மாவின் பாசத்திற்கு ஈடானது. இந்தப்படம் இரு பெருங்குடும்பத்தின் கதை இது. அந்தப் பெருங்குடும்பத்தின் ஆணிவேராக என் கேரக்டர் இருக்கிறது. என்னுடைய கதைகளுக்கு தமிழில் ஒரு ஹீரோ இல்லையே என்ற ஏக்கம் இருந்தது. அதைத் தீர்க்க வந்தவர் கவுதம் கார்த்தி. அவர் நடிப்பில் எல்லாத் தளங்களிலும் கலக்கி வருகிறார். இந்தப்படம் சாதி படம் அல்ல. ஆட்டக்கலைகளை பற்றிய தகவல்களை திரட்டிய போது தேவராட்டம் என்ற ஆட்டத்தைப் பற்றி அறிந்தேன். தேவராட்டம் என்றால் தேவர்கள் ஆடும் ஆட்டமல்ல. இது எல்லாச் சாதிகளும் ஆடும் ஆட்டம்" என்றார்.
இயக்குநர் முத்தையாவும் தேவராட்டம் சாதிபடம் இல்லை என்று கூறினார்.

இயக்குநர் முத்தையாவும் தேவராட்டம் சாதி படம் இல்லை என்று பேசினார். 

ஆனால் இவர்களை தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியத் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா,``முத்தையா பொய் சொல்கிறார். அவர் சாதிப்படம்தான் எடுத்திருக்கார். ஆனால் பொய் சொல்றார். முத்தையாவோட வாழ்வியல் தான் தேவராட்டம் திரைப்படம். அவர் வளர்ந்த விதத்தை அவர் படமாக்குகிறார். ரஞ்சித் `அட்டக்கத்தி' படம் எடுத்தார். அது அவரோட வாழ்வியல். இவர் படங்கள் இவரோட வாழ்வியல்" என்றார்.

இப்படி மாற்றி மாற்றி படக்குழு பேசுவது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.


Leave a reply