குழந்தைகள் விரும்பி சாப்பிடும் பிரெட் சமோசா ரெசிபி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்...
தேவையான பொருட்கள்:
பிரெட் ஸ்லைஸ் - 6
வேக வைத்த உருளைக்கிழங்கு - 1
வேக வைத்த பட்டாணி - ஒரு கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒன்று
நறுக்கிய பூண்டு - 6
சிவப்பு, பச்சை குடை மிளகாய் - ஒரு கப்
மிளகாய் தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்
மல்லித் தூள் - முக்கால் டேபிள் ஸ்பூன்
சோம்புத் தூள் - அரை டேபிள் ஸ்பூன்
காய்ந்த மாங்காய் தூள் - கால் டீஸ்பூன்
எண்ணெய்
உப்பு
செய்முறை:
முதலில் பிரெட் ஸ்லைஸ்களின் ஓரங்களை வெட்டி தனியாக வைக்கவும்.
ஒரு வாணலியில், எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சோம்பு, பூண்டு, வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமாக மாறியதும், சிவப்பு மற்றும் பச்சை குடை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி வேக வைக்கவும்.
பின்னர், மிளகாய்த்தூள், மல்லித்தூள், சோம்பு, உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
கடைசியாக, மசித்த உருளைக்கிழங்கு, பட்டாணி சேர்த்து நன்றாக வேக வைக்கவும். காய்கள், பட்டாணி அனைத்தும் நன்றாக வெந்து பச்சை வாசனை போனப் பிறகு இறக்கிவிடவும்.
பிறகு, பிரெட்டை சப்பாத்தி உருட்டலை வைத்து அழுத்தி உருட்டவும்.
பின்னர், ஒவ்வொரு பிரெட் ஸ்லைஸ்கள் உள்ளேயும் மசாலா வைத்து மூடி ஓரங்களில் தண்ணீர்விட்டு ஒட்டிவிடவும்.
இறுதியாக, ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிரெட்டை போட்டு பொன்னிறமாக பொறித்து எடுக்கவும்.
அவ்ளோதாங்க.. சுவையான பிரெட் சமோசா ரெசிபி ரெடி..!