இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டியில் 42வது லீக் ஆட்டம் பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.
டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இதனால், பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது.
இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூரு அணி 3 வெற்றிகள் மற்றும் 7 தோல்விகளை தழுவியுள்ளது. இந்த போட்டியில் கோலி அணி வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முன்னேறுமா?
அல்லது புள்ளிப்பட்டியலில் 5 வெற்றி 5 தோல்விகளுடன் 5வது இடத்தில் இருக்கும் பஞ்சாப் அணி வெற்றி பெற்று 4ம் இடத்துக்கு முன்னேறுமா? என்ற பரபரப்பு நிலவுவதால், சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறும் இன்றைய ஆட்டம் விறுவிறுப்புக்கு பஞ்சம் இன்றி இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
பெங்களூரு அணியில் பார்த்திவ் படேல், கேப்டன் விராத் கோலி, ஏபி டிவில்லியர்ஸ் மற்றும் மொஹின் அலி நல்ல ஃபார்மில் இருப்பதால், 180 முதல் 200 ரன்கள் எடுத்து பஞ்சாப் அணிக்கு இலக்கு நிர்ணயித்தால் பஞ்சாப் அணி வெற்றி பெறுவதில் சிரமம் ஏற்படலாம்.
அந்த அணியிலும் லோகேஷ் ராகுல், கிறிஸ் கெய்ல், டேவிட் மில்லர் என அதிரடி பேட்ஸ்மேன்கள் இருப்பதால், அதிக அளவிலான ஸ்கோரை எடுத்தாக வேண்டிய சூழலுக்கு பெங்களூரு அணி தள்ளப்பட்டுள்ளது.