ஸ்ரேயாஸ், தவான் அதிரடி – பஞ்சாபை பந்தாடியது டெல்லி அணி!

Delhi Capitals beat Kings XI Punjab by 5 wickets remaining

by Mari S, Apr 21, 2019, 07:28 AM IST

டெல்லி ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற 37வது லீக் போட்டியில் பஞ்சாப் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அணி வெற்றி பெற்றது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் டி20 லீக் போட்டி நேற்று டெல்லியில் உள்ள ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது.

முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணியில் கிறிஸ் கெய்லை தவிற யாரும் சிறப்பாக ஆடவில்லை. 37 பந்துகளில் 5 சிக்ஸர்கள் 6 பவுண்டரிகள் விளாசிய கிறிஸ்கெய்ல் 69 ரன்கள் எடுத்த நிலையில், லமிச்சானே பந்து வீச்சில் பெவிலியன் நோக்கி அடித்த பந்தை அக்ஸார் படேல் சாதூர்யமாக செயல்பட்டு சிறப்பாக கேட்ச் பிடித்து அவுட் ஆக்கினார்.

அவரை அடுத்து விளையாடிய பஞ்சாப் வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்தனர். மந்தீப் சிங் சற்று பொறுப்புடன் விளையாடி 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது.

164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியில் துவக்க ஆட்டக்காரரான பிரித்வி ஷா 13 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார்.

ஷிகர் தவான் மற்றும் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் தங்களின் பொறுப்பான ஆட்டத்தால் இருவரும் அரைசதம் கடந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

ஷிகர் தவான் 56 ரன்களுடனும் ஸ்ரேயாஸ் அய்யர் 58 ரன்களுடனும் அவுட்டாகினர். கடைசியில் கோலின் இங்ராம் 9 பந்துகளில் 4 பவுண்டரிகள் விளாசி 19 ரன்கள் சேர்த்த நிலையில் ஷமி பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

19.4 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்து டெல்லி அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக ஸ்ரேயாஸ் அய்யர் தேர்வானார்.

இதுவரை தலா 10 போட்டிகளில் விளையாடியுள்ள பஞ்சாப் மற்றும் டெல்லி அணி நேற்றைய வெற்றி, தோல்வி மூலம் முறையே டெல்லி அணி 3ம் இடத்திலும் பஞ்சாப் அணி 4ம் இடத்திலும் புள்ளிப் பட்டியலில் இடம்பிடித்துள்ளன.

ஐதராபாத் அணியை அடித்து நொறுக்கிய டெல்லி அணி; 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!

More Sports News