ஆந்திராவில் ஜெகன்மோகன் அரசில் 5 துணை முதல்வர்கள் உள்பட 25 அமைச்சர்கள் இன்று பதவியேற்றுள்ளனர். ஆனால், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நடிகை ரோஜாவுக்கு அமைச்சர் பதவி தரப்படவில்லை. இதனால், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
ஆந்திராவில் நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் சேர்த்து நடத்தப்பட்டது. இதில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 151 ெதாகுதிகளை கைப்பற்்றி அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து, அக்கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திராவின் புதிய முதல்வராக கடந்த 30ம் தேதியன்று பதவியேற்றார்.
இந்நிலையில், ஜெகன் அரசின் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா இன்று நடைபெற்்றது. 5 துணை முதல்வர்கள் உள்பட 25 அமைச்சர்கள் பதவியேற்றனர். அமைச்சரவையில் 7 பேர் பிற்படுத்தப்பட்ட இனத்தவர், 4 பேர் ரெட்டி, 5 பேர் தலித் மற்றும் முஸ்லிம், வைசியர், சத்திரியர் என்று ஒவ்ெவாரு இனத்தவருக்கும் தலா ஒரு பதவி என்று வழங்கப்பட்டுள்ளது.
அதே போல், வடக்கு, கிழக்கு கடலோர மாவட்டங்களுக்கு 4, கிழக்கு, மேற்கு கோதாவரி மாவட்டங்களுக்கு 6, கிருஷ்ணா, குண்டூர் மாவட்டங்களுக்கு 5, பிரகாசம், நெல்லூர் மாவட்டங்களுக்கு 4, ராயலசீமா மாவட்டங்களுக்கு 6 என்று அமைச்சர் பதவிகள் தரப்பட்டிருக்கின்றன.
ஆனால், தேர்தல் முடிவுகள் வந்தது முதல் அமைச்சராவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டவர் நடிகை ரோஜா. கட்சியின் மகளிர் அணித் தலைவியாக இருக்கும் இவருக்கு தொண்டர்களிடம் நிறைய செல்வாக்கு உள்ளது. மீடியாக்களும் ஆதரவாக இருப்பதால், இவர் நிச்சயம் அமைச்சர் என்றும், உள்துறை அல்லது மின்சார இலாகா தரப்படும் என்றும் பலவாறாக பேசப்பட்டது. ஆனால், அவருக்கு அமைச்சர் பதவி தரப்படவில்லை. இது தொண்டர்களுக்கு, குறிப்பாக மகளிர் அணியினருக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.
சாதி அடிப்படையில் பெட்டிரெட்டி, ராமச்சந்திரரெட்டி மற்றும் மேகப்பட்டி கவுதம் ரெட்டி என்று அமைச்சர் பதவிகள் தரப்பட்டு விட்டதால், அந்த இனத்தைச் சேர்ந்த ரோஜாவுக்கு தரப்படவில்லை என்று கட்சியில் கூறப்பட்டது. எனினும், கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் முடிந்ததுமே ரோஜாவை அழைத்து ஜெகன் பேசினார். அப்போது, அமைச்சர் பதவி தர முடியாமல் போனதற்கான காரணங்களை கூறி, நிச்சயமாக வேறொரு பதவி தருவதாக உறுதியளித்தார். இதனால், மிகவும் வருத்தத்தில் இருந்த ரோஜா சற்றே நிம்மதியாகி உள்ளார்.
தற்போது, தற்காலிக சபாநாயகராக ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த உறுப்பினர் சம்பங்கி, சின்ன வெங்கட அப்பாலா நாயுடு நியமிக்கப்பட்டிருக்கிறார். மேலும், புதிய சபாநாயகர் பதவிக்கு தம்மிநேனி சீதாராம், துணை சபாநாயகர் பதவிக்கு ரகுபதி ஆகியோரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. எனவே, ேராஜாவுக்கு அரசு தலைமைக் கொறடா பதவி தரப்படலாம் என்று ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது.
ஒருவேளை அந்தப் பதவியும் தரப்படாவிட்டால், வரும் 14ம் தேதியன்று சட்டசபையில் ஆளுநர் உரையாற்றி முடித்த பின்பு, அடுத்த வாரத்தில் வேறொரு பதவியை ரோஜாவுக்கு ஜெகன் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அது அமைச்சர் பதவிக்கு இணையாக உள்ள வாரியத் தலைவர் பதவி ஏதாவது இருக்கலாம் எனத் தெரிகிறது.