ஆர்.டி.ஜி.எஸ். பணபரிமாற்றத்திற்கு ஜூலை 1 முதல் கட்டணம் இல்லை

Online fund transfer through NEFT and RTGS to be free from July 1, says RBI

by எஸ். எம். கணபதி, Jun 12, 2019, 11:01 AM IST

ஒரு வங்கிக் கணக்கில் இருந்து இன்னொரு வங்கிக் கணக்கிற்கு பணம் பரிமாற்றம் செய்யும் நெப்ட், ஆர்.டி.ஜி.எஸ். முறைகளில் அடுத்த மாதம் முதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

நாம் ஒரு வங்கிக் கணக்கில் இருந்து இன்னொரு வங்கிக் கணக்கிற்கு ரூ.2 லட்சம் வரை நெப்ட்(நேஷனல் எலக்ட்ரானிக் பண்ட் டிரான்ஸ்பர்) மூலம் அனுப்பலாம். அதே போல், ரூ.2 லட்சத்திற்கு மேல் பணம் அனுப்புவதென்றால், ஆர்.டி.ஜி.எஸ்.(ரியல் டைம் கிராஸ் செட்டில்மெண்ட் சிஸ்டம்) முறையில் அனுப்பலாம். இதற்கு ரூ.5 முதல் ரூ.50 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும், ஜி.எஸ்.டி வரியும் விதிக்கப்படுகிறது.

தற்போது நெப்ட் மற்றும் ஆர்.டி.ஜி.எஸ் முறையில் பணபரிமாற்றம் செய்வதற்கு விதிக்கப்படும் கட்டணங்களை ரத்து செய்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இது ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளது. எனவே, அடுத்த மாதம் முதல் வங்கிகள் இந்த 2 வகையான பணபரிமாற்றத்திற்கும் கட்டணம் வசூலிக்காது. அதே சமயம், பிராசசிங் கட்டணம் என்று சிறிய தொகையை வங்கிகள் வசூலிக்க வாய்ப்புள்ளது.

More India News


அண்மைய செய்திகள்