திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜூலை 17 ஆம் தேதி காலை அதிகாலை 1.31 மணி முதல் 4.29 மணி வரை சந்திர கிரகணம் ஏற்படவுள்ளதாகவும், இதையொட்டி 16ஆம் தேதி இரவு 7மணி முதல் 17 ஆம் தேதி காலை 5 மணி வரை கோவில் நடை அடைக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
பின்னர் கோவில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு சுப்ரபாத சேவையுடன் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து தோமாலை சேவை, பஞ்சாங்கம் படித்து, அர்ச்சனை போன்ற சேவைகள் ஏகாந்தமாக பக்தர்கள் அனுமதிக்கப்படாமல் அர்ச்சகர்கள் மட்டும் நடத்த உள்ளனர். இதைத் தொடர்ந்து 11 மணிக்கு பிறகு சர்வ தரிசனத்தில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். 16 ஆம் தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனத்துடன் சந்திர கிரகணம் ஏற்பட உள்ளதால் அஷ்டதள பாத பத்ம ஆராதனை சேவை, வசந்த உற்சவம், சகஸ்கர தீப அலங்கார சேவை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. இதேபோன்று 17ஆம் தேதி ஆனிவார ஆஸ்தானத்தையொட்டி கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் ,வசந்த உற்சவம், சகஸ்கர தீப அலங்கார சேவையை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை அடைப்பு என உறுதி படுத்தியுள்ளனர்.