பாதை மாற்றும் போதை பழக்கம் (ஜூன் 26 - சர்வதேச போதை மருந்து எதிர்ப்பு நாள்)

Advertisement

"ஒரே ஒரு தடவை... ட்ரை பண்ணி பாருடா," - திருமண விழா ஒன்றில் நண்பர்களின் வற்புறுத்தலின்பேரில் விக்னேஷ், கொஞ்சம் மதுவை சுவைத்தான்.
"தண்ணி சாப்பிடும்போது மட்டும் தம் அடிச்சுக்கடா," - என்று புகை பிடிக்கும் பழக்கத்தையும் கற்றுக்கொடுத்தார்கள்.


நண்பர்களுக்காக மது அருந்தவும், புகை பிடிக்கவும் ஆரம்பித்த விக்னேஷ், அப்பழக்கம் தேர்வுகள் தரும் மனஅழுத்தத்திலிருந்து, குடும்ப பிரச்னைகளிலிருந்து சற்று விடுதலை தருவதாக உணர்ந்தான். கல்லூரி நண்பர்கள் மத்தியில் இது ஒரு கெத்து என நம்பினான்.
எப்போதாவது என்றிருந்த மதுப்பழக்கம் சில மாதங்களுக்குள் தினமும் பல கட்டிங் போடும் வண்ணம் கூடியது. ஒரு மணி நேரத்திற்குள் இரண்டு சிகரெட்டுகளை புகைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. நாளடைவில் உடல் நலம் மட்டுமல்ல, பணமும் ஏராளமாய் விரயமாகியது.
சிலர் மட்டும் அடிமைகளாய்... ஏன்?
மது, புகை மற்றும் போதை மருந்து பழக்கத்திற்கு சிலர் அடிமைகளாகி விடுகின்றனர். சிலர் அப்படி அடிமைகளாவதில்லை.
அடிமைத்தனத்திற்கு பல காரணங்கள் உண்டு. ஒரே ஒரு காரணத்திற்குள் அதை அடக்கிவிட முடியாது. பெற்றோருக்கு மதுப்பழக்கம் இருந்தால், பிள்ளைகளுக்கு அப்பழக்கம் தொற்றிக்கொள்வதற்கு மற்ற குடும்பத்து பிள்ளைகளை விட மூன்று முதல் நான்கு மடங்கு வாய்பு அதிகம். சிலருக்கு மூளையிலேயே அடிமைத்தன இயல்பு இருக்கக்கூடும். ஆளுமை குளறுபடி மற்றும் மனோதிடம் இல்லாதவர்கள் மிக எளிதாகவே இது போன்ற பழக்கங்களுக்கு அடிமைகளாகிவிடுவர். சமுதாய விதிமுறைகளை எதிர்கொள்ள முடியாதவர்களும் போதை பழக்கத்திற்கு அடிமைகளாகின்றனர்.
மனித குணம் அல்ல; நோய்
மருத்துவ அறிவியல், போதை அடிமைத்தனத்தை ஒரு நோயாகவே பார்க்கிறது. ஆனால், சமுதாயம் அதை ஒரே ஒருவரின் குணம் சம்மந்தப்பட்டதாகவே பார்க்கிறது. போதை பழக்கத்திற்கு சமுதாயம் மற்றும் பண்பாட்டு காரணிகள் இருந்தாலும், பரம்பரை மற்றும் உயிரியல் காரணங்களையும் புறக்கணிக்க இயலாது.
மன அழுத்தம், மனக்கலக்கம், உணர்ச்சிகரமான பிரச்னைகள், மனச்சோர்வு, மனோதிடமின்மை, சூழல், மது அல்லது மருந்து கிடைத்தல், நட்பு வட்டம், அனுமதி, பரம்பரை பழக்கம் இவையெல்லாம் காரணமாக இருந்தாலும் கூட, குடும்பத்தில் இருக்கும் பழக்கமே 30 முதல் 60 விழுக்காடு காரணமாக இருப்பதாக ஓர் ஆய்வு கூறுகிறது.
சுய கட்டுப்பாடின்மை, வாழ்க்கை எதிர்நோக்கும் சவால்கள், பிரச்னைகளை எதிர்கொள்ளும் மனோதிடமின்மை, பிரச்னைகளை தவிர்க்கும் மனப்பாங்கு இவையெல்லாம் போதை பழக்கத்தை ஏற்றுக்கொள்ள மனதை தூண்டுகின்றன.
பன்முக தீமை
மது மற்றும் போதை பழக்கத்திற்கு அடிமைகளாவோர், நாள்பட அவற்றை பயன்படுத்தும் அளவு அதிகரித்துக்கொண்டே போகும். அவற்றை பயன்படுத்தாமல் இருக்கவே முடியாத சூழல் ஏற்படுவதே அடிமைத்தனம் எனப்படுகிறது.
மதுப்பழக்கம், ஈரல், சிறுநீரகம், கணையம், நினைவுத்திறன் ஆகியவற்றை பாதிப்பதோடு நடுக்கம், மனநிலை பாதிப்பு, நரம்பியல் பாதிப்பு ஆகியவற்றையும் கொண்டு வருகிறது. போதை ஊசி போட்டுக்கொள்வோருக்கு இரத்த நாள பாதிப்பு, இரத்த நாள அடைப்பு போன்ற பாதிப்புகளும் மஞ்சள் காமாலை, எய்ட்ஸ் போன்ற நோய்களும் வரக்கூடும்.
நோய்தொற்று, குடல், இரைப்பை சம்மந்தப்பட்ட பிரச்னைகள், நோய் தடுப்பாற்றல் குறைவு, சுவாச கோளாறு ஆகியவையும் வரக்கூடும். மது மற்றும் மருந்து போதையில் வாகனம் ஓட்டினால் விபத்து நடைபெறும் அபாயமும் உண்டு.
அடிமைத்தனத்தின் அறிகுறிகள்
மனப்பாங்கு மற்றும் நடத்தையில் திடீர் மாற்றம், எதிலும் பிடிப்பு இல்லாமல் இருத்தல், படிப்பு மற்றும் வேலையில் கவனமின்மை, அதிக பணத்தேவை, இரத்தம் தோய்ந்த கண்கள், சோர்ந்த கருவிழிகள், குறுகிய காலத்தில் உடல் எடை குறைதல், உடலில் ஊசி குத்திய அடையாளங்கள், சுத்தமாக மற்றும் நல்ல தோற்றத்துடன் இருப்பதில் அக்கறையின்மை, கை கால் நடுக்கம் மற்றும் உதறல், பணம், குடும்பம், உடல்நலம் மற்றும் சட்டரீதியான பிரச்னைகள் இருந்தும் போதை பழக்கத்தை விட்டுவிட மனமொப்பாமல் இருத்தல் ஆகியவை இருந்தால் அந்நபர் மது அல்லது போதை மருந்து பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டார் என்று புரிந்து கொள்ளலாம்.
எப்படி உதவலாம்?
மது மற்றும் போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களை விடுபட உதவியை நாடுமாறு ஊக்கப்படுத்தவேண்டும். அவர்கள் சூழலில் இருந்து அவர்களை புரிந்துகொள்ள வேண்டும். மாறாக, குற்றப்படுத்தி பேசக்கூடாது. கண்டிப்பாக இப்பழக்கத்திலிருந்து வெளி வர இயலும் என்று நம்பிக்கையூட்டவேண்டும். மது மற்றும் போதை மருந்தை பயன்படுத்தக்கூடிய சூழ்நிலை மற்றும் நண்பர்களை சந்திப்பதை தவிர்க்க உதவ வேண்டும். மருத்துவர் அல்லது சிறப்பு மருத்துவர் கூறும் சிகிச்சையை கடைபிடிக்க உதவ வேண்டும்.
மது மற்றும் போதை பழக்கத்திற்கு அடிமைகளாக இருப்போர் திடீரென அவற்றை நிறுத்தினாலும் உடல்நல பிரச்னைகள் வரக்கூடும். ஆகவே, அவற்றை பயன்படுத்துவதை மருத்துவ ஆலோசனையின் பேரில் செய்ய வேண்டும்.

வேலைக்குச் செல்லும் பெண்களை வாட்டும் நோய்கள்

Advertisement
மேலும் செய்திகள்
bil-and-melinda-gates-to-divorce-after-27-years-of-marriage
மனைவி யை விவகாரத்து செய்யும் பில்கேட்ஸ்…! பிரிவிற்கு என்ன காரணம் தெரியுமா…?
in-an-installment-vaccine-get-protection-from-deformed
ஒரு தவணை தடுப்பூசி உருமாறிய கொரோனாவை தடுக்குமா…? ஆய்வு முடிவு என்ன செல்கிறது…?
why-patients-must-get-their-heart-checked-post-recovery
கொரோனாவில் இருந்து மீண்ட பின் இதயத்தில் என்ன மாற்றம் ஏற்படும் என தெரியுமா? – மருத்துவ வள்ளூநர்கள் அதிர்ச்சி தகவல்…
today-is-international-firefighters-day-observance
மே 4 : என்ன தினம் என்று யாருக்காவது தெரியுமா...?
australians-to-face-jail-or-heavy-fine-if-they-go-home-from-india
சொந்த நாட்டிற்கு திரும்பினால் 5 ஆண்டுகள் சிறை ரூ.5 லட்சம் அபராதமா…? அதிர வைத்த பிரதமர்…!
an-81-year-old-man-living-alone-on-an-island-in-italy
32 ஆண்டுகள் தனியாக வாழ்ந்த தீவை விட்டு வெளியேறிய மனிதர்! என்ன காரணம்?
do-you-know-why-hitler-threatened-the-world-and-committed-suicide
உலகையே அச்சுறுத்திய ஹிட்லர் எதனால் தற்கொலை செய்தார் என்று தெரியுமா?
youngsters-can-affected-in-covid19-second-time
இளம் வயதினரே உஷார்! – இரண்டாம் முறையாக கூட கொரோனா தாக்கலாம்
indonesian-navy-releases-poignant-video-of-nowsunk
நீர்மூழ்கிக் கப்பலில் உயிரிழந்த வீரர்களின் கடைசி நிகழ்வு வீடியோ வெளியீடு
brit-awards-to-have-4000-strong-audience-and-no-social-distancing-as-part-of-uk-government-test
மாஸ்க் வேணாம் பாதுகாப்பான இடைவெளி தேவையில்லை – 4000 பேர் பங்கேற்கும் பிரமாண்ட இசை விழா!
/body>