சந்திரயான்-2 விண்கலம் 22ல் விண்ணில் ஏவப்படும்; இஸ்ரோ அறிவிப்பு

சந்திரயான்-2 விண்கலம் வரும் 22ம் தேதி விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.

நிலவில் தண்ணீர் இருக்கிறதா? மனிதன் வாழும் சூழல் உள்ளதா? என்பதை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-1 என்ற விண்கலத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) கடந்த 2009-ம் ஆண்டு அனுப்பியது. நிலவில் தண்ணீர் மூலக்கூறுகள் இருப்பதற்கான அடையாளங்களை சந்திரயான்-1 கண்டுபிடித்தது. இதையடுத்து, நிலவின் தென்துருவத்தில் ஆய்வு செய்வதற்காக, 978 கோடி ரூபாய் செலவில் சந்திரயான்-2 விண்கலத்தை இஸ்ரோ உருவாக்கியது.

நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்காக ஆர்பிட்டர், நிலவில் தரை இறங்கி ஆய்வு செய்ய லேண்டர், ரோவர் என்று அந்த விண்கலத்தில் 3 பெரிய கருவிகள் இடம்பெற்றிருந்தன. இவற்றில் அதிநவீன கேமராக்கள், வெப்பநிலையை ஆய்வு செய்யும் கருவிகள், லேசர் கருவிகள் என 13 வகையான கருவிகள் இணைக்கப்பட்டிருந்தன. ஓராண்டு ஆய்வில் ஈடுபடக் கூடிய ஆர்பிட்டரின் எடை மட்டுமே 2.4 டன்னாகும். எனவே, மிக அதிக எடை கொண்ட விண்கலத்தை அனுப்பும் ஜிஎஸ்எல்வி மார்க்3 ராக்கெட்டில் சந்திரயான்-2 வி்ண்கலம் அனுப்ப திட்டமிடப்பட்டிருந்தது.

இந்த விண்கலத்தை, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து கடந்த 15ம் தேதி அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் செலுத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கான 20 மணி நேர கவுன்ட் டவுன் கூட 14ம் தேதி தொடங்கியது. மறுநாள் அதிகாலை 2.51 மணிக்கு சந்திரயான் விண்கலம் விண்ணில் ஏவப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 56 நிமிடங்கள் முன்னதாக, அதாவது காலை 1.55 மணியளவில் கவுன்ட் டவுன் திடீரென நிறுத்தப்பட்டது. ராக்கெட்டில் இறுதி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சந்திரயான் 2 விண்கலம் செலுத்துவது நிறுத்தப்பட்டதாக இஸ்ரோ விளக்கம் அளித்தது.

இந்நிலையில்், வரும் 22ம் தேதியன்று சந்திரயான் 2 விண்கலம் விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ இன்று அறிவித்திருக்கிறது. இந்த விண்கலம் 50 நாட்கள் பயணம் செய்து, நிலவின் தெற்கு துருவத்தில் தரையிறங்கும். நிலவில் தண்ணீர் இருக்கிறதா? என்பதை அறிவதற்கு இந்த விண்கலம் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளும். மேலும், நிலவின் பரப்பு குறித்தும் பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ளவிருந்தது. நிலவின் தென்பகுதிக்கு உலகில் எந்த நாடும் விண்கலம் அனுப்பி ஆய்வு செய்ததில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

சந்திரயான்-2 விண்கலத்தில் திடீர் கோளாறு ; மீண்டும் விண்ணில் பாய்வது எப்போது?

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS
Advertisement
மேலும் செய்திகள்
INX-media-case-SC-hearing-on-p-chidambarams-appeal-adjourned-to-Monday
ப.சிதம்பரத்தின் மேல் முறையீட்டு மனு ; திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
Triple-talaq-law-to-be-reviewed-by-Supreme-Court-notice-issued-to-Centre
முத்தலாக் தடை சட்டத்திற்கு எதிர்ப்பு; மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
Kashmir-restrictions-back-as-posters-surface-calling-for-march-to-UN-office
காஷ்மீரில் எதிர்ப்பு போஸ்டர்; மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்
INX-media-case-SC-hearing-p.chidambarams-appeal-petition-today
ப.சிதம்பரத்தின் மேல் முறையீடு : உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை; தள்ளுபடியாக வாய்ப்பு
INX-media-case-p-chidambaram-sent-to-cbi-custody-till-August-26
ப.சிதம்பரத்துக்கு திங்கட்கிழமை வரை சிபிஐ காவல்; சிறப்பு நீதிமன்றத்தில் பரபரப்பாக நடந்த வாதம்
20-questions-CBI-posed-to-P-Chidambaram-accused-in-INX-media-case
சிதம்பரத்திடம் 20 கேள்வி; பதிலளிக்க மறுத்தாரா?
P-Chidambaram-arrested-in-INX-media-case-spends-quiet-night-in-Suite-5-at-CBI-HQ
அன்று விருந்தாளி, இன்று ஊழல் கைதி; அதே சி.பி.ஐ. அலுவலகம்
P.chidambaram-arrest-cbi-acted-as-local-police-ex-cbi-officer-rahothaman-criticizes
ப.சிதம்பரம் கைது : லோக்கல் போலீஸ் போல் சிபிஐ நடந்து கொண்டது ; முன்னாள் சிபிஐ அதிகாரி ரகோத்தமன்
INX-media-case-ex-FM-p-chidambaram-arrested-by-CBI
சுவர் ஏறிக்குதித்து ப.சிதம்பரத்தை கைது செய்தது சிபிஐ ; இன்று நீதிமன்றத்தில் ஆஜர்
INX-media-case--no-relief-for-p.chidambaram--SC-to-hear-bail-petition-on-Friday
ப.சிதம்பரத்துக்கு 2 நாட்கள் நிம்மதியில்லை; முன் ஜாமீன் மனு வெள்ளிக்கிழமை விசாரணை
Tag Clouds