குஜராத்தில் லாக் அப் முன்பாக இந்தி பாடலுக்கு டான்ஸ் ஆடி, டிக்டாக் வீடியோ வெளியிட்ட பெண் காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
குஜராத் மாநிலத்தில் முதலமைச்சர் விஜய் ரூபானி தலைமையில் பாஜக ஆட்சி நடக்கிறது. இங்குள்ள மேஷானா மாவட்டம், லங்னாஜ் காவல் நிலையத்தில் அர்பிதா சவுத்ரி என்ற பெண் காவலர் பணியாற்றுகிறார். இவர் கடந்த 2016ம் ஆண்டில் ஆயுதப்படைக்கு தேர்வு செய்யப்பட்டு, 2018ம் ஆண்டில் மேஷானா மாவட்டக் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில், அர்பிதா கடந்த 20ம் தேதியன்று காவல் நிலையத்தில் யாரும் இல்லாத சமயம், காக்கிச் சட்டையை கழற்றி விட்டு, பிங்க் கலரில் ஒரு சட்டையை அணிந்து கொண்டு, டான்ஸ் ஆடியுள்ளார். கைதிகளை அடைக்கும் லாக் அப் முன்பாக நின்று இந்தி படப் பாடலுக்கு அவர் டான்ஸ் ஆடியது மட்டுமில்லாமல், அதை டிக் டாக் ஆப்ஸில் வீடியோ எடுத்து வாட்ஸ் அப்பில் போட்டு விட்டார்.
இது வைரலாக பரவி விடவே, காவல் துறை உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு சென்றது. உடனடியாக அவரை சஸ்பெண்ட் செய்த அதிகாரிகள், அவரிடம் துறை ரீதியாக விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளனர்.
திசைமாறி குஜராத்தை மிரட்டிய 'வாயு' புயல்.. 3 லட்சம் பேர் வெளியேற்றம்