டெல்லியில் நள்ளிரவில் தீ 5 பேர் சாவு, 11 பேர் காயம்

டெல்லியில் அடுக்குமாடி குடியிருப்பில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் பலியாகியுள்ளனர். 11 பேர் படுகாயம் அடைந்தனர்.

தென்கிழக்கு டெல்லியில் உள்ள ஜாகீர் நகரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நேற்றிரவு திடீரென தீப்பற்றியது. மக்கள் உஷாராகி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், தீ மளமளவென பரவியதில் பலர் தீவளையத்திற்குள் சிக்கிக் கொண்டனர். தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு 8 தீயணைப்பு வாகனங்கள் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. சுமார் 20 பேர் மீட்கப்பட்டனர்.

இந்த விபத்தில் 5 பேர் பலியாகினர். மேலும் 11 பேர் படுகாயம் அடைந்து ஹோலி பேமிலி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அந்த ஆஸ்பத்திரியின் தலைமை மருத்துவர் மாலா கூறுகையில், ‘ஐந்து பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்’’ என்று தெரிவித்தார். தீ விபத்து காரணம் குறித்து டெல்லி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

காஷ்மீரில் ஊடுருவ முயன்று கொல்லப்பட்ட 7 பாக்.வீரர்கள்; சடலங்களை எடுத்துச் செல்ல இந்தியா அனுமதி

Advertisement
More India News
cyberabad-police-commissioner-sajjanar
என்கவுன்ட்டர் நடத்திய  போலீஸ் கமிஷனர் விசி சஜ்னாருக்கு பாராட்டு குவிகிறது.. சம்பவம் பற்றி பரபரப்பு பேட்டி..
my-daughters-soul-at-peace-now-hyd-vets-father
என் மகள் ஆத்மா சாந்தி அடையும்..  பெண் டாக்டர் தந்தை உருக்கம்..
4-accused-in-hyderabad-rape-murder-case-killed-in-encounter-telangana-police
பெண் டாக்டரை எரித்து கொன்ற 4 பேர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை.. ஐதராபாத்தில் இன்று அதிகாலை பரபரப்பு..
p-chidambaram-asks-whether-finance-minister-eats-avocado-instead-of-onion
நிதியமைச்சர் வெண்ணெய் பழம் சாப்பிடுகிறாரா? சிதம்பரம் காட்டம்..
p-chidambaram-says-after-coming-out-jail-my-first-prayers-were-for-the-75-lakh-people-of-the-kashmir
காஷ்மீர் மக்களுக்காக பிரார்த்தனை செய்தேன்.. ப.சிதம்பரம் பேட்டி
amitshah-and-modi-live-in-their-own-imagination-says-rahul-gandhi
மோடியும், அமித்ஷாவும் கற்பனை உலகில் வாழ்கிறார்கள்.. ராகுல் பேட்டி
congress-leaders-including-p-chidambaram-protest-in-parliament
நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் தர்ணா.. ப.சிதம்பரம் பங்கேற்பு
chidambaram-walks-out-of-tihar-jail
திகார் சிறையில் இருந்து ப.சிதம்பரம் விடுதலை.. ராஜ்யசபாவுக்கு வருகிறார்
6-from-tamil-nadu-among-18-indians-killed-in-sudan-blast
சூடான் தொழிற்சாலையில் காஸ் டேங்கர் வெடித்தது.. 6 தமிழர் உள்பட 18 இந்தியர் பலி..
union-cabinet-approved-the-proposal-to-extend-the-scst-reservation
மக்களவை, சட்டசபைகளில் எஸ்சி, எஸ்டி ஒதுக்கீடு.. 10 ஆண்டுக்கு நீட்டிப்பு
Tag Clouds

READ MORE ABOUT :