காஷ்மீரில் ராணுவப் பணி டோனிக்கு புதிய கார் ரெடி

by எஸ். எம். கணபதி, Aug 11, 2019, 07:40 AM IST

காஷ்மீரில் எல்லை ராணுவத்தில் பயிற்சியில் இருக்கும் கிரிக்கெட் வீரர் டோனிக்கு புதிய எஸ்யூவி கார் வீட்டில் தயாராக காத்திருக்கிறது. அந்த வீட்டுக்கு டெலிவரியான காரை படம் பிடித்து இன்ஸ்டகிராமில் போட்டிருக்கிறார் சாக்‌ஷி டோனி.


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான மகேந்திரசிங் டோனிக்கு மோட்டார் பைக்குகள் மற்றும் கார்களின் மீது அலாதிப் பிரியம். அவர் பல மாடல்களில் புதுப்புது வண்டிகளை வாங்குவதே அவரது ஹாபியாகி விட்டது. ஏற்கனவே அவர் பெராரி 599 ஜிடிஓ, ஹம்மர்-எச்2, ஜிஎம்சி-சியரா உள்ளிட்ட கார்களையும், கவாஸகி, சுசுகி உள்ளிட்ட கம்பெனிகளின் பெரிய மாடல் பைக்குகளையும் வைத்திருக்கிறார்.


டோனி, ராணுவத்தில் கவுரவப் பணியில் சேர்ந்திருக்கிறார். அவர் தற்போது எல்லை ராணுவத்தில் பயிற்சியில் இருக்கிறார். அவர் ஜீப் கிராண்ட் செரோகீ என்ற புதிய எஸ்யூவி காருக்கு புக்கிங் செய்திருந்தார். சிவப்பு நிற கார் வீட்டுக்கு வந்து சேர்ந்ததும்,
அந்த காரை போட்டோ எடுத்த அவரது மனைவி சாக்‌ஷிசிங், அதை இன்ஸ்டகிராமில் வெளியிட்டிருக்கிறார். அதில், ‘வெல்கம் ரெட்பீஸ்ட், டோனி உங்கள் விளையாட்டு பொருள் இங்கு வந்து விட்டது. உங்கள் வருகைக்கு காத்திருக்கிறாம்’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.


Leave a reply