அசைவப் பிரியர்களுக்குப் பிடித்த ஆட்டு மூளை வறுவல் ரெசிபி

அசைவப் பிரியர்கள் விரும்பி சாப்பிடும் ஆட்டு மூளை வறுவல் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

ஆட்டு மூளை - 10

சின்ன வெங்காயம் - 20

தக்காளி - 2

சோம்பு - அரை டீஸ்பூன்

பட்டை - ஒன்று

கிராம்பு - 3

ஏலக்காய் - 2

நட்சத்திர சோம்பு - 1

இஞ்சி - ஒரு துண்டு

பூண்டு - 5 பல்

பச்சை மிளகாய் - 2

மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

மல்லித்தூள் - ஒன்றரை டீஸ்பூன்

மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்

மிளகு - ஒரு டீஸ்பூன்

சீரகம் - ஒரு டீஸ்பூன்

கறிவேப்பிலை

கொத்தமல்லித்தழை

நல்லெண்ணெய்

உப்பு

செய்முறை:

முதலில் வாணலியில் மிளகு, சீரகம், கறிவேப்பிலை போட்டு மிதமாக வறுத்து மிக்ஸி ஜாரில் அரைத்து பொடி செய்து தயாராக வைக்கவும்.

பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் மஞ்சள் தூள், உப்பு, மூளை துண்டுகள் சேர்த்து கலந்து 2 நிமிடங்கள் விட்டு எடுக்கவும்.

மற்றொரு பாத்திரத்தில் நல்லெண்ணெய்விட்டு சூடானதும் பட்டை, சோம்பு, கிராம்பு, பிரிஞ்சி இலை, ஏலக்காய், நட்சத்திர சோம்பு, பொடியாக நறுக்கிய பூண்டு, இஞ்சி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.

அத்துடன், சின்ன வெங்காயம், பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.

பின்னர், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்த பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். கொஞ்சமாக தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.

இந்நிலையில், மூளை துண்டுகள், அரைத்து வைத்த மசாலா சேர்த்து கலந்து சுமார் 5 நிமிடங்கள் விட்டு இறக்கவும்.

சுவையான மூளை வறுவல் ரெடி..!

Advertisement
More Ruchi corner News
how-to-make-groundnut-laddu
போர் அடிக்குதா.. வேர்க்கடலை லட்டு செய்து சாப்பிடலாமே!
Tasty-Banana-Poori-Recipe
தித்திக்கும் வாழைப்பழ பூரி ரெசிபி
Healthy-Ragi-Chappathi-Recipe
ஆரோக்கியமான கேழ்வரகு சப்பாத்தி ரெசிபி
Yummy-Chocolate-Paniyaram-Recipe
குழந்தைகளுக்குப் பிடித்த சாக்லேட் பணியாரம் ரெசிபி
Healthy-Green-Lentils-salad-Recipe
சத்தான முளைக்கட்டிய பச்சை பயறு சாலட் ரெசிபி
Tasty-Chicken-Brocolli-Fry-recipe
ருசியான சிக்கன் ப்ரக்கோலி வறுவல் ரெசிபி
Methi-Leaf-Masala-Chappathi-Recipe
வெந்தயக் கீரை மசாலா சப்பாத்தி ரெசிபி
Tasty-Cream-Bun-Recipe
புதுவிதமான சுவையில் கிரீம் பண் ரெசிபி
Tasty-Non-veg-Favourite-Goat-Brain-Fry-Recipe
அசைவப் பிரியர்களுக்குப் பிடித்த ஆட்டு மூளை வறுவல் ரெசிபி
Yummy-Sago-Laddu-Recipe
சுலபமா செய்யலாம் ஜவ்வரிசி லட்டு ரெசிபி
Tag Clouds