விண்வெளி ஆய்வில் முக்கிய மைல் கல் இஸ்ரோ தலைவர் பெருமிதம்

by எஸ். எம். கணபதி, Aug 20, 2019, 13:53 PM IST
Share Tweet Whatsapp

சந்திரயான்-2 விண்கலம் இன்று காலையில், புவி வட்டப்பாதையில் இருந்து பிரிந்து நிலவின் வட்டப்பாதைக்கு சென்று, சுற்றத் தொடங்கியுள்ளது. விண்வெளி ஆய்வில் இது முக்கிய மைல் கல் என்று இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.

நிலவின் தென்துருவப் பகுதியில் இறங்கி ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2 என்ற விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம்(இஸ்ரோ) கடந்த மாதம் 22ம் தேதி விண்ணில் செலுத்தியது. ஜிஎஸ்எல்வி மார்க்3 என்ற 640 டன் எடை கொண்ட ராக்கெட்டின் மூலம் சந்திரயான்-2 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

புவி வட்டப் பாதையில் சுற்றி வந்த சந்திரயான்-2 இன்று நிலவின் வட்டப் பாதைக்கு அனுப்பப்பட்டது. இன்று காலை 9 மணிக்கு இப்பணி தொடங்கியது. 30 நிமிடங்களில் நிலவின் வட்டப்பாதைக்கு சந்திரயான்-2 சென்றது, அந்த வட்டப்பாதையில் சுற்றத் தொடங்கியுள்ளது. வரும் 28, 30, செப்.1ஆகிய நாட்களில் நிலவை நெருங்கும் வட்டப்பாதைகளில் சந்திரயான்-2 மாறும். கடைசியாக, செப்.7ம் தேதி அதிகாலையில் சந்திரயானில் உள்ள லேண்டர் விக்ரம், நிலவில் இறக்கப்படும். அது முதல் நிலவின் தென்துருவத்தில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ள லேண்டர் விக்ரம் தகவல்களை அனுப்பத் தொடங்கும்.

இந்நிலையில், சந்திரயான் விண்கலத்தை வெற்றிகரமாக நிலவின் வட்டப் பாதைக்கு அனுப்பியது, இந்திய விண்வெளி ஆய்வு பணியில் மேலும் ஒரு மைல் கல் என்று இஸ்ரோ தலைவர் சிவன் பெருமிதம் தெரிவித்தார்.

'பெருமைகள் எல்லாம் மூதாதையரான குரங்குகளுக்கே சேரும்' - சந்திரயான் திட்ட வெற்றி குறித்து சு.சாமி 'குசும்பு'


Leave a reply