பொருளாதார வீழ்ச்சி : பா.ஜ.க. அரசு எப்ப கண்ணை திறக்கும்? பிரியங்கா காந்தி ட்விட்

by எஸ். எம். கணபதி, Sep 10, 2019, 11:41 AM IST
Share Tweet Whatsapp

ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி, சந்தையில் நம்பிக்கையை குறைத்து வருகிறது. பாஜக அரசு எப்போது கண் திறக்கும்? என்று பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.

மத்திய பாஜக அரசை காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார். ட்விட்டரிலும் பல்வேறு விமர்சனங்களை பதிவிட்டு வருகிறார். இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட் பதிவில், பொருளாதார நிலை மிகவும் கீழே போய்க் கொண்டிருக்கிறது. லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தின் மீது ஒரு கத்தி தொங்கிக் கொண்டே இருக்கிறது.

ஆட்டோமொபைல் துறையில் தொடர்ந்து ஏற்படும் வீழ்ச்சி காரணமாக, உற்பத்தி மற்றும் போக்குவரத்து குறைந்து சந்தையில் நம்பிக்கையை குறைத்து வருகிறது. எப்போது தான் அரசாங்கம் கண் விழிக்குமோ? என்று கூறியிருக்கிறார்.


Leave a reply