அரசு வங்கிகளில் 3 மாதத்தில் ரூ.32 ஆயிரம் கோடி முறைகேடு... ரிசர்வ் வங்கி கொடுத்த புள்ளிவிவரம்

by எஸ். எம். கணபதி, Sep 10, 2019, 11:48 AM IST
Share Tweet Whatsapp

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில், இந்த ஆண்டின் முதல் காலாண்டில் ரூ.32 ஆயிரம் கோடி வரை முறைேகடுகள் நடந்துள்ளன. இது தொடர்பாக 2480 வழக்குகள் பதிவாகியுள்ளன என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஆர்.டி.ஐ. ஆர்வலர் சந்திரசேகர் என்பவர், ரிசர்வ் வங்கியிடம் ஒரு கேள்வி எழுப்பியிருந்தார். அதில், பொதுத் துறை வங்கிகளில் நடந்துள்ள முறைகேடுகள் பற்றி கேட்டிருந்தார்.

அதற்கு ரிசர்வ் வங்கி அளித்துள்ள புள்ளி விவரங்கள் வருமாறு :

இந்த ஆண்டின் முதல் காலாண்டில், 18 பொதுத் துறை வங்கிகளில் ரூ.31,898 கோடி பரிமாற்றங்களில் முறைகேடுகள் நடந்துள்ளன. இது தொடர்பாக 2480 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக, ஸ்டேட் வங்கியில் ரூ.12,012 கோடி முறைகேடுகள் நடந்துள்ளது. இதற்காக 1194 வழக்குகள் தாக்கலாகியுள்ளது. இரண்டாவதாக, அலகாபாத் வங்கியில் ரூ2,855 கோடி முறைகேடுகள் நடந்துள்ளது. இதற்காக 381 வழக்குகள் பதிவாகியுள்ளது. 3வதாக பஞ்சாப் நேஷனல்வங்கியில் ரூ.2526 கோடி முறைகேடு நடந்துள்ளது. இதற்கு 99 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வங்கி முறைகேடுகளால் வங்கிகளுக்கு எவ்வளவு இழப்பு என்பது இன்னும் மதிப்பீடு செய்யப்படவில்லை.

இவ்வாறு ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது.


Leave a reply