அமிதாப்பச்சனுக்கு திடீர் உடல் நலகுறைவு... தீவிர சிகிச்சையால் குடும்பத்தினர் கவலை..

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனுக்கு கடந்த 15ஆம் தேதி நள்ளிரவில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவரது நுரையிரலில் பிரச்னை ஏற்பட்டு மூச்சுவிட சிரமப்பட்டதாக கூறப்படுகிறது.

உடனடியாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தீவிர சிகிச்சை பிரிவுக்கு இணையான தனி அறையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் அவரைப் பார்க்க குடும்ப உறுப்பினர்களை தவிர வேறு யாருக்கும் இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 1982ஆம் ஆண்டு கூலி என்ற இந்தி படத்தில் அமிதாப்பச்சன் நடித்தபோது அவருக்கு விபத்து ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை பெற்று வந்தபோது 'ஹெப்பி டைடிஸ் பி' என்ற வைரஸ் தொற்று ஏற்பட்ட அவரது கல்லீரல் 75 சதவீதம் பாதிக்கப்பட்டது. இதனால் பலமுறை அவர் உடல்நலகுறைவால் பாதிக்கப்பட்டார்.

உடல்நல பாதிப்பு ஒருபக்கம் இருந்தாலும் இப்போதும் திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகளில் அமிதாப் சுறுசுறுப்புடன் பங்கேற்கிறார். ஆனால் தற்போது அமிதாப்புக்கு ஏற்பட்டிருக்கும் திடீர் உடல் நலக் குறைவு குடும்பத்தினரை கவலையில் ஆழ்த்தி உள்ளது.

Advertisement
More India News
prime-minister-said-that-he-want-frank-discussions-on-all-matter-in-parliament
அனைத்து விஷயங்களிலும் வெளிப்படையான விவாதம்.. பிரதமர் மோடி உறுதி..
justice-sharad-arvind-bobde-sworn-in-as-chief-justice
47வது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே பதவியேற்பு..
parliament-winter-session-starts-today
நாடாளுமன்றம் இன்று கூடுகிறது.. புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் தயார்
government-of-india-has-extended-the-visa-on-arrival-facility-to-u-a-e-nationals
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இந்தியா விசா சலுகை..
shivsena-accuses-bjp-of-horse-trading-attempts
குதிரைப்பேரத்தில் பாஜக.. சிவசேனா குற்றச்சாட்டு.. கவர்னருடன் இன்று சந்திப்பு
navys-mig-jet-crashes-in-goa-pilots-eject-safely
மிக் போர் விமானம் விழுந்து தீப்பிடிப்பு.. 2 விமானிகள் தப்பினர்
amid-confusion-and-threats-sabarimala-temple-opens-today
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு.. பெண்கள் வருவார்களா?
economy-fine-people-getting-married-airports-full-union-minister-suresh-angadi
கல்யாணம் நடக்குது.. ரயில் நிரம்பி வழியுது.. பொருளாதாரம் சூப்பர்..
fir-registered-on-v-g-p-sons-in-land-fraud-charge-in-karnataka-police
வி.ஜி.பி. மகன்கள் மீது பெங்களூரு போலீஸில் நில மோசடி வழக்கு.. குடும்ப மோதல் காரணம்?
supreme-court-rebukes-ed-on-plea-against-shivakumar-bail
அமலாக்கத் துறைக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்..
Tag Clouds