என் மகள் ஆத்மா சாந்தி அடையும்..  பெண் டாக்டர் தந்தை உருக்கம்..

by Chandru, Dec 6, 2019, 16:12 PM IST
Share Tweet Whatsapp

ஐதராபாத், டிச: 6:

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் ஷம்சாபாத் சுங்கச் சாவடி அருகே 26 வயது பெண் டாக்டரை லாரி ஓட்டுநர் மற்றும் கிளீனர் உள்பட 4 பேர் கூட்டு பலாத்காரம் செய்து பெட்ரோல் உற்றி எரித்துக் கொலை செய்தனர்.  

கொலைக் குற்றவாளிகளை கைது செய்த போலீஸார் இன்று அதிகாலை சம்பவ இடத்துக்கு விசாரணை செய்ய அவர்களை  அழைத்து சென்றபோது நால்வரும் போலீஸாரை தாகிவிட்டு தப்பி ஓட முயன்றனர். அவர்களை என்கவுன்ட்டரில் போலீசார் சுட்டு கொன்றனர்.

4 பேர் என்கவுண்ட்டர் செய்யப்பட்டது குறித்து, பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண் டாக்டரின் தந்தை  கூறியதாவது:

என் மகள் கொல்லப்பட்ட சம்பவம்  மிகவும் கொடூரமானது. அவர் இறந்து 10 நாட்கள் ஆகிவிட்டன. என் மகளை கொன்ற குற்றவாளிகள் 4 பேரையும் போலீஸார் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொன்றிறிருக்கின்றனர்.  அதைக் கண்டு என் மகளின் ஆத்மா  சாந்தி அடையும். குற்றவாளிகள் 4 பேரை சுட்டுக்கொன்ற போலீசாருக்கும், தெலுங் கானா அரசுக்கும் நன்றி” என்றார்.


Leave a reply