கவலை தேவையில்லை.. அசாம் மக்களுக்கு பிரதமர் மோடி உறுதி..

by எஸ். எம். கணபதி, Dec 12, 2019, 11:11 AM IST
Share Tweet Whatsapp

குடியுரிமை சட்டத் திருத்த சட்டத்தால் அசாம் மக்கள் கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியுள்ளது. இந்த சட்டத்தின் மூலம், வங்கதேசம், பாகிஸ்தான் நாடுகளில் இருந்து அசாம் மாநிலத்தில் குடியேறிய மக்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டால், தங்களின் சொத்துக்கள், உரிமைகள் பாதிக்கப்படும் என்று கருதி அசாம் பூர்வக் குடிமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால், அசாமில் கடந்த 4 நாட்களாக போராட்டங்களும், வன்முறைச் சம்பவங்களும் நடந்து வருகின்றன.

இந்நிலையில், பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டு கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று அசாமில் வசிக்கும் சகோதர, சகோதரிகளுக்கு உறுதி அளிக்கிறேன்.

அசாம் மக்களின் உரிமைகளையும், தனி அடையாளத்தையும், அழகான கலாசாரத்தையும் யாராலும் பறிக்க முடியாது என்று உறுதி அளிக்கிறேன். இந்த கலாசாரம் இன்னும் நன்றாக செழித்தோங்கும் என்று உறுதியளிக்கிறேன்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.


Leave a reply