குடியுரிமை சட்டத் திருத்த மசோதா: அமித்ஷா பேச்சுக்கு வங்கதேச அமைச்சர் பதிலடி

by எஸ். எம். கணபதி, Dec 12, 2019, 11:42 AM IST

"அமித்ஷா எங்கள் நாட்டுக்கு வந்து சில மாதங்கள் தங்கினால், வங்கதேசம் எவ்வளவு சமூக நல்லிணக்கம் கொண்ட நாடு என்பதை உணருவார்" என்று வங்கதேச அமைச்சர் அப்துல் மேமன் கூறியிருக்கிறார்.

இந்திய நாடாளுமன்றத்தில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதா மீதான விவாதத்திற்கு பதிலளித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசுகையில், வங்கதேசம், பாகிஸ்தான் நாடுகளில் சிறுபான்மை இந்துக்கள் எந்தளவுக்கு மதரீதியாக துன்புறுத்தப்பட்டார்கள். அவர்களுக்கு நாம் வாழ்வு தர வேண்டியது கட்டாயம் என்று குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் வங்கதேச வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல் மேமன், பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திற்கு ஒரு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது:

இந்தியா ஒரு சகிப்புத்தன்மை கொண்ட நாடு என்ற வரலாற்று சிறப்பை கொண்டது. மதச்சார்பின்மை மீது மிகவும் நம்பிக்கை கொண்ட நாடு என்ற வரலாற்றைக் கொண்டது. இதிலிருந்து விலகிச் சென்றால் அதன் வரலாற்று சிறப்புகளை அது பலவீனப்படுத்தி விடும்.

சமூக நல்லிணக்கம் சிறப்பாக உள்ள வெகு சில நாடுகளில் வங்கதேசமும் ஒன்று. இந்திய உள்துைற அமைச்சர் அமித்ஷா இங்கு வந்து சில மாதங்கள் தங்கினால், இங்குள்ள சிறப்பான சமூகநல்லிணக்கத்தை நேரடியாக பார்க்கலாம்.
இந்தியாவுக்குள் பல பிரச்னைகள் உள்ளன. அவர்களுக்குள் மோதிக் கொள்ளட்டும். அதைப் பற்்றி நாங்கள் கவலைப்படவில்லை. ஆனால், நட்புநாடான எங்களுடைய நட்பில் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இந்தியா எதையும் செய்யக் கூடாது. அப்படி செய்யாது என்று நம்புகிறோம்.
இவ்வாறு அப்துல் மேமன் கூறியுள்ளார்.


More World News