தலைவர் 168 - பூஜையுடன் தொடக்கம்.. ரஜினியுடன் குஷ்பு, மீனா பங்கேற்பு..

by Chandru, Dec 12, 2019, 10:38 AM IST

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்திருக்கிறார் ரஜினிகாந்த். இதில் நயன்தாரா ஹீரோயின். வரும் பொங்கல் தினத்தில் இப்படம் திரைக்கு வரவுள்ளது.

இதற்கிடையில் சிறுத்தை சிவா இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் ரஜினி. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் கீர்த்தி சுரேஷ் இளம் நாயகியாகவும் சீனியர் நடிகைகள் மீனா, குஷ்பு முக்கிய வேடங்களிலும் நடிக்கின்றனர். நகைச்சுவை கதாபாத்திரத்தில் ரஜினியுடன் முதன்முறையாக இணைந்து நடிக்கிறார் சூரி. டி.இமான் இசை அமைக்கிறார்.

ரஜினியின் 168வது படமாக உருவாகும் இதன் பூஜை அவரது பிறந்த நாளன்று தொடங்கும் என்று கூறப்பட்ட நிலையில் ஒரு நாள் முன்னதாக இன்று பட பூஜை எளிமையாக நடந்தது. இதில் ரஜினிகாந்த், சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன், இயக்குனர் சிவா, குஷ்பு, மீனா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இப்படம் நெட்டில் வைரலாக பரவி வருகிறது.


More Cinema News