ஜார்கண்டில் ஜே.எம்.எம் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும்.. கணிப்புகளில் தகவல்

by எஸ். எம். கணபதி, Dec 21, 2019, 12:59 PM IST

ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் ஜே.எம்.எம்- காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும் என்று தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகளில் தெரிய வந்துள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 81 தொகுதிகளுக்கு 5 கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. இதில் பதிவான வாக்குகள் வரும் 23ம் தேதி எண்ணப்பட உள்ளது.

ஜார்க்கண்டில் ஆளும் பாஜக முதல் முறையாக தனித்து போட்டியிடுகிறது. ஜே.எம்.எம் கூட்டணியில் காங்கிரஸ், ஆர்.ஜே.டி ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிட்டன.
தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகளில் 2 கணிப்புகள், ஜே.எம்.எம். தலைமையிலான காங்கிரஸ், ஆர்.ஜே.டி கட்சிகளின் கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவிக்கின்றன.

இந்தியா டுடே-ஆக்ஸிஸ் வெளியிட்ட கணிப்பில் ஜே.எம்.எம். கூட்டணி 38 முதல் 50 தொகுதிகளில் வெற்றி பெறும் என கூறப்பட்டிருக்கிறது. சி வோட்டர்- ஏ.பி.பி. கணிப்பில் பாஜகவுக்கு 28 முதல் 36 இடங்களே கிடைக்கும் என்பதால் மெஜாரிட்டி கிடைக்காது என்று கூறப்பட்டிருக்கிறது.

அதே சமயம், பாஜக மொத்தம் உள்ள 81 தொகுதிகளில் 65 இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சியமைப்போம் என்று உறுதியாக கூறி வருகிறது. வரும் 23ம் தேதியன்று யார் ஆட்சியைப் பிடிப்பார்கள் என்பது தெரியவரும்.

You'r reading ஜார்கண்டில் ஜே.எம்.எம் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும்.. கணிப்புகளில் தகவல் Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை