நாட்டின் புதிய ராணுவ தளபதியாக ஜெனரல் மனோஜ் முகந்த் நரவனே பதவியேற்றார்.
ராணுவ தலைமை தளபதியாக இருந்த பிபின் ராவத் இன்று ஓய்வு பெற்றார். தலைமை தளபதிக்கு சீனியாரிட்டி அடிப்படையில்தான் பெரும்பாலும் நியமனம் செய்யப்படும். அந்த வகையில் இதுவரை துணை தலைமை தளபதியாக உள்ள மனோஜ் முகுந்த் நரவனே, அடுத்த தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டார்.
இதன்படி, மனோஜ் முகந்த் நரவனே இன்று காலையில் ராணுவ தளபதியாக பொறுப்பேற்று கொண்டார்.
இவர் ஏற்கனவே கிழக்கு பிராந்திய தளபதியாக பதவி வகித்தார். அச்சமயம், இந்தியா-சீனா இடையேயான சுமார் 4,000 கி.மீ. தூர எல்லையை பாதுகாக்கும் பணிக்கு பொறுப்பு வகித்தார். ராணுவத்தில் 37 ஆண்டு கால அனுபவம் உடைய நரவனே, ஜம்மு-காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களிலும் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது.