2019ம் ஆண்டில் வெளியான 209 படங்கள் பட்டியல்.. இந்த வருடத்தின் சோகமும், மகிழ்ச்சியும்..

by Chandru, Dec 31, 2019, 18:38 PM IST

2019-ம் ஆண்டில் மொத்தம் 209 படங்கள் வெளியாகின. அதில் 10 படங்கள்தான் வெற்றி படங்களாக அமைந்தன என்பது அதிர்ச்சி தரும் தகவலாக இருக்கிறது. ரஜினி, விஜய், அஜீத், விக்ரம், சூர்யா, கார்த்தி, விஷால், விஜய்சேதுபதி, தனுஷ் இளம் நடிகர்கள் நடித்த படங்கள் வெளியாகின. அதன் விவரம் வருமாறு:

களவு, சிகை. இக்லோ. தேவக்கோட்டை காதல், மாணிக், பேட்ட, விஸ்வாசம். சார்லி சாப்ளின் 2, குத்தூசி, சிம்பா. பேரன்பு, பேய் எல்லாம் பாவம், சகா, சர்வம் தாளமயம், வந்தா ராஜாவாதான் வருவேன். தில்லுக்கு துட்டு 2, பொதுநலன் கருதி. அவதார வேட்டை, நேத்ரா, உறங்காபுலி,வாண்டு, தேவ், கோகோ மாகோ. சித்திரம் பேசுதடி 2, ஏழாவது காதல், காதல் மட்டும் வேணா, டுலெட், அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய், கண்ணே கலைமானே, எல்.கே.ஜி, பெட்டிக்கடை
தேடி வந்த நோய், அடடே, விளம்பரம், பிரிவதில்லை, தாதா 87, தடம், 90 ML, திருமணம், கபிலவஸ்து, ஸ்பாட், பொட்டு, சத்ரு, பூமராங், கில்லி பம்பரம் கோலி, அகவன், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், ஜுலை காற்றில், நெடுநல்வாடை, சேட்டக்காரங்க, பதனி, நீர்த்திரை, மானசி, பட்டிபுலம், சாரல், அக்னி தேவி, எம்புரான், ஐரா, சூப்பர் டீலக்ஸ் நட்பே துணை, கணேசா மீண்டும் சந்திப்போம், குடிமகன், குப்பத்து ராஜா, உறியடி 2, கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ், ராக்கி தி ரவென்ஞ்ச், வாட்ச்மேன், ழகரம், காஞ்சனா 3, மெஹந்தி சர்க்கஸ், வெள்ளைப் பூக்கள், அழகரும் இரண்டு அல்லக்கைகளும், முடிவில்லா புன்னகை, தேவராட்டம், கே 13, தனிமை, தந்தை சொல் மிக்க மந்திரமில்லை, எங்கு சென்றாய் என் உயிரே, கீ, உண்மையின் வெளிச்சம், வேதமானவன், 100, அயோக்யா, மான்ஸ்டர், மிஸ்டர் லோக்கல், நட்புன்னா என்னான்னு தெரியுமா, லிசா, நீயா 2, ஒளடதம், பேரரழகி ஐஎஸ்ஓ, சீனி, வண்ணக்கிளி பாரதி, தேவி 2, என்.ஜி.கே, திருட்டுக்கல்யாணம், கொலைகாரன், ஜெயிக்கப் போவது யாரு, ருசித்து பார் என் அன்பை, கேம் ஓவர், சுட்டுப்பிடிக்க உத்தரவு, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு, தும்பா, மோசடி, சிந்துபாத், ஜீவி, தர்ம பிரபு, நட்சத்திர ஜன்னலில், ஹவுஸ் ஓனர், எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல, களவாணி 2, காதல் முன்னேற்ற கழகம், ராட்சசி, வாழ்த்துகிறேன், கூர்கா, கொரில்லா, போதை ஏறி புத்தி மாறி, தோழர் வெங்கடேசன், வெண்ணிலா கபடி குழு 2, ஆடை, கடாரம் கொண்டான், உணர்வு, ஆறடி, ஏ 1, சென்னை பழனி மார்ஸ், கொளஞ்சி, கழுகு 2, ஐஆர்8, ஜாக்பாட், தொரட்டி நேர்கொண்ட பார்வை, கொலையுதிர் காலம், ரீல், சீமபுரம், வளையல், கோமாளி, மான்குட்டி, கென்னடி கிளப், பக்ரீத், காதல் பிரதேசம், மெய், சாஹோ, சிக்சர், குற்ற நிலை, மயூரன்ம மகாமுனி சிவப்பு மஞ்சள் பச்சை, ஜாம்பி, என் காதலி சீன் போடுறா, ஒங்கள போடணும் சார், பெருநாளி, காப்பான், ஒத்த செருப்பு சைஸ் 7, சூப்பர் டூப்பர், என்றும் உன் நினைவிலே, கோலா, நமக்குள் நாம், நம்ம வீட்டுப் பிள்ளை, திட்டம் போட்டு திருடுற கூட்டம், அசுரன், 100% காதல், அருவம், பெட்ரோமாக்ஸ், பப்பி, பெள பெள, காவியன், பிகில், கைதி, பட்லர் பாலு, மிக மிக அவசரம், தவன், ஆக்‌ஷன், சங்கத்தமிழன், ஆதித்ய வர்மா, கேடி (எ) கருப்பு துரை, மேகி, பணம் காய்க்கும் மரம், பேய் வால பிடிச்ச கதை, அடுத்த சாட்டை 2, அழியாத கோலங்கள் 2, எனை நோக்கி பாயும் தோட்டா, மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ், தீமைக்கும் நன்மை செய், தனுசு ராசி நேயர்களே, குண்டு, இருட்டு, ஜடா, 50 ரூபா, கேப்மாரி, சாம்பியன், சென்னை டூ பாங்காக், காளிதாஸ், கருத்துகளைப் பதிவு செய், மெரினா புரட்சி, மங்குனி பாண்டியர்கள், திருப்பதிசாமி குடும்பம், ஹீரோ, கைலா, பரமு, தம்பி, விருது, 50/50, நான் அவளை சந்தித்த போது, பக்சராக்‌ஷரம், சில்லுக் கருப்பட்டி, உதய், வி 1, பரிகாரம்.

உதிர்ந்த மலர்கள்
தமிழ் திரையுலகில் ஒவ்வொரு ஆண்டும் சாதனையாளர்கள் தோன்றிய வண்ணமிருக்கின்றனர். சாதனையாளர்களில் சரித்திரம் படைத்த பலர் வாழ்ந்துகொண்டிருந்தாலும் அவர்களில் ஒன்றிரண்டு சரித்திர மலர்களாவது ஒவ்வொரு ஆண்டும் உதிர்ந்துவிழுகிறது. முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், நெஞ்சத்தை கிள்ளாததே, ஜானி காலத்தால் அழிக்க முடியாத பல்வேறு படங்களை இயக்கி அளித்தவர் மகேந்திரன்.

இயக்குனராக மட்டுமல்லாமல் இறுதிகாலகட்டங்களில் அவர் நடிகராகவும் மாறினார். நடிப்பிலும் இன்னொருசாதனை படைப்பார் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில் கடந்த ஏப்ரல் 2ல் அவர் மரணம் அடைந்தார். .தமிழில் ஆசை முகம், பணம் படைத்தவன், அதே கண்கள், நெஞ்சிருக்கும் வரை மற்றும் தெலுங்கு, மலையாளம் என தென்னிய மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் நடிகை கீதாஞ்சலி. இவர் கடந்த அக்டோபர் 31ம் தேதி தனது 71வது வயதில் மரணம் அடைந்தார்.

தமிழில் மறக்க முடியாத மற்றொரு நடிகை விஜயநிர்மலா. 200 படங்களில் நடித்த இவர் 40 படங்களை இயக்கியும் இருக்கிறார். சென்ற ஜூன் 27ம் தேதி காலமானார். அவருக்கு வயது 73. அதிக படங்களை இயக்கிய பெண் இயக்குனர் என கின்னஸ் சாதனையில் இவரது பெயர் இடம்பிடித்திருக்கிறது.

நடிகர் கிரேஸி மோகன் 66வது வயதில் ஜூன் 10ம் தேதி மரணம் அடைந்தார். காலமானார். இயக்குனர், நடிகர் ராஜசேகர், நடிகர் பாலாசிங் கொல்லுப்புடி மாமருதிராவ், காமெடி நடிகர்கள் டைப்பிஸ்ட் கோபு, கிருஷ்ணமூர்த்தி, தயாரிப்பாளர்கள் வெங்கட்ராமரெட்டி, ஆலயம் ஸ்ரீராம் 2019ம் ஆண்டில் காலமாயினர்.

டும் டும்..

திரையுலகில் ரசிகர்களுக்கு பொழுதுபோக்கு ஆனால் நட்சத்திரங்களுக்கு அதுதான் வாழ்க்கை. தொழில் செய்யும் இடமாக இருக்கும் திரையுலகில் சில சமயம் இதயங்களை இணைக்கும் இடமாகவும் மாறிவிடுகிறது. இந்த ஆண்டில் நடிகர் ஆர்யா நடிகை சாயிஷாவை காதல் திருமணம் செய்து கொண்டார்.

நடிகைஅமலாபாலை மணந்து பின்னர் அவரிடமிருந்து விவாகரத்து பெற்ற இயக்குனர் ஏ.எல்.விஜய் தனது உறவுக்கார பெண் டாக்டர் ஐஸ்வர்யாவை மணந்தார். ஒஸ்தி படத்தில் சிம்புவுடனும், மயக்கம் என்ன படத்தில் தனுஷ் உடனும் நடித்த நடிகை ரிச்சா கங்கோபாத்யாய் தன்னுடன் படித்த சக அமெரிக்க மாணவர் ஜோ லாங்கெல்லா என்பவரை காதலித்து திருமணம் செய்தார்.

நீண்ட நாள் திருமணத்துக்காக ஏங்கிக்கொண்டிருந்த நகைச்சுவை நடிகர் சதீஷ் இயக்குனரின் தங்கை சிந்துவை மணந்தார். மேற்கு தொடர்ச்சி மலை, ஜோக்கர் படங்களில நடித்த காயத்ரி மலையாள திரைப்பட கேமராமேன் ஜீவன் என்பவரை மணந்தார். சந்தானத்துடன் பல படங்களில் காமெடி காட்சிகளில்நடித்த ஜாங்கிரி மதுமிதா தனது நீண்ட நாள் காதலர் மோசஸை திருமணம் செய்தார்.

வரும் 2020ம் புத்தாண்டில் திரையுலகில் சாதனைகளும், மகிழ்ச்சியும் தொடர வாழ்த்துக்கள்.

You'r reading 2019ம் ஆண்டில் வெளியான 209 படங்கள் பட்டியல்.. இந்த வருடத்தின் சோகமும், மகிழ்ச்சியும்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை