நிதியமைச்சகத்தில் அல்வா.. நிர்மலா சீதாராமன் பங்கேற்பு

by எஸ். எம். கணபதி, Jan 20, 2020, 13:02 PM IST

மத்திய நிதியமைச்சக அலுவலகத்தில் நடைபெற்ற அல்வா கிளறும் நிகழ்ச்சியில், நிர்மலா சீதாராமன் பங்கேற்றார்.

நாடாளுமன்றக் கூட்டத் தொடர் வரும் 31ம் தேதி தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், அன்று இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். இதைத் தொடர்ந்து, மத்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கலாகிறது.
பின்னர், பிப்.1ம் தேதியன்று மத்திய அரசின் 2020-2021ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய பட்ஜெட்டில் அதிகமான பக்கங்களில் இணைப்பு ஆவணங்களும் இடம் பெறும். பொதுவாக, பட்ஜெட்டில் எந்த ஒரு பகுதியும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும் முன்பாக வெளியாகாமல் ரகசியமாக பாதுகாக்கப்படும். பட்ஜெட் லீக் ஆனால், அது அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும்.
இதனால், மத்திய பட்ஜெட் தயாரிக்கப்படும் போது நிதியமைச்சகம் அமைந்துள்ள நார்த் பிளாக் கட்டிடத்திே்்லயே அதிகாரிகள் தங்கி விடுவார்கள். அப்ேபாது அவர்களுக்கு அங்கு உணவு தயாரித்து வழங்கப்படும். இந்த உணவு தயாரிப்பை தொடங்கும் போது முதலில் அல்வா கிளறுவார்கள். இந்நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் கலந்து கொள்வார்.
வரும் ஆண்டுக்கான பட்ஜெட் அச்சடிப்பு பணி தொடங்கவிருப்பதால், அல்வா கிளறும் நிகழ்ச்சி இன்று காலை நார்த் பிளாக்கில் நடைபெற்றது. இதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று, அல்வா கிளறினார். இதில் பட்ஜெட் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நிதியமைச்சக அதிகாரிகளும் பங்கேற்றனர்.

You'r reading நிதியமைச்சகத்தில் அல்வா.. நிர்மலா சீதாராமன் பங்கேற்பு Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை