காஷ்மீர் குறித்து பேசினோம்.. இம்ரானை சந்தித்த பின் டொனால்டு டிரம்ப் பேட்டி..

by எஸ். எம். கணபதி, Jan 22, 2020, 09:04 AM IST

காஷ்மீர் விவகாரம் குறித்து இம்ரான்கானுடன் பேசினேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியிருக்கிறார்.

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது. மேலும், காஷ்மீர் மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்ப்டடது. இதற்கு எதிர்ப்பாக போராட்டங்கள், வன்முறைகள் நிகழாவண்ணம் தடுப்பதற்காக அம்மாநில அரசியல் தலைவர்கள் உள்பட சுமார் 500 பேர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர். அவர்களில் சிலர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இப்பிரச்னையை ஐ.நா. சபைக்கு கொண்டு சென்று, சர்வதேச பிரச்னையாக்க முயன்றது. ஆனால், அதன் முயற்சிகள் அனைத்தும் தோற்றன. காஷ்மீர் விவகாரம், இந்தியாவின் உள்நாட்டு பிரச்னை என்றும் இதில் யாரும் தலையிட முடியாது என்றும் இந்தியா உறுதியாக கூறி வருகிறது.

இந்நிலையில், லாவோஸில் உலக பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பின், செய்தியாளர்களிடம் டிரம்ப் கூறுகையில், நாங்கள் காஷ்மீர் விவகாரம் குறித்து பேசினோம். இந்த விஷயத்தில் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையேயான பிரச்னைகள் என்னவென்று விவாதித்தோம். இந்த பிரச்னைகளை தீர்க்க எங்களால் உதவ முடியும் என்றால், உதவுவதற்கு தயாராக உள்ளோம். காஷ்மீர் விவகாரத்தை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்றார்.
இம்ரான்கான் கூறுகையில், இந்தியாவுடன் உள்ள பிரச்னைகளை அமெரிக்காவால் தீர்க்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம் என்றார்.

You'r reading காஷ்மீர் குறித்து பேசினோம்.. இம்ரானை சந்தித்த பின் டொனால்டு டிரம்ப் பேட்டி.. Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை