தேசிய வாக்காளர் தினம்.. தேர்தல் ஆணையத்திற்கு பிரதமர் மோடி பாராட்டு..

by எஸ். எம். கணபதி, Jan 25, 2020, 12:49 PM IST

இந்தியா கடந்த 1950ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டது. அதற்கு முதல் நாளன்று நாட்டில் இந்திய தேர்தல் ஆணையம் செயல்படத் தொடங்கியது. அதனால், ஆண்டுதோறும் ஜனவரி 25ம் தேதியை தேசிய வாக்காளர் தினமாக கடைபிடித்து வருகிறோம்.

அதன்படி, இன்று வாக்காளர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:
தேசிய வாக்காளர் தின வாழ்த்துகள். தேர்தல் ஆணையம் தனது பல்வேறு முயற்சிகளின்மூலம் தேர்தல் நடைமுறையை அதிக சக்திவாய்ந்ததாகவும், அனைவரும் பங்கேற்க கூடிய வகையிலும் உருவாக்கியதற்காக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு நன்றி தெரிவிக்கிறோம்.
ஜனநாயகத்தை மேலும் வலிமை படைத்ததாக மாற்றுவதற்கு வாக்காளர் விழிப்புணர்வை அதிகரிக்கவும், வாக்கு சதவீதத்தை உயர்த்தும் வகையிலும் இந்த நாள் நமக்கு ஊக்கத்தை ஏற்படுத்தும் என்று வாழ்த்துகிறேன்.
இவ்வாறு பிரதமர் கூறியுள்ளார்.

You'r reading தேசிய வாக்காளர் தினம்.. தேர்தல் ஆணையத்திற்கு பிரதமர் மோடி பாராட்டு.. Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை