அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஸ்டாலின் பாராட்டு..

by எஸ். எம். கணபதி, Feb 11, 2020, 18:12 PM IST

டெல்லியில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

டெல்லி சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
டெல்லியில் மிகப் பெரிய வெற்றி பெற்று, இன்னொரு முறை ஆட்சியமைக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கும், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் பாராட்டுகள். மதஅரசியலை வீழ்த்தி வளர்ச்சி அரசியல் வெற்றி பெற்றிருக்கிறது.

நாட்டு நலனுக்காக, கூட்டாட்சி உரிமைகள், பிராந்திய எதிர்பார்ப்புகள் ஆகியவற்றை மீண்டும் உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.


Leave a reply