லாரி மீது சொகுசு பஸ் மோதி 14 பேர் பலி, 30 பேர் காயம்

by எஸ். எம். கணபதி, Feb 13, 2020, 15:43 PM IST

உத்தரப்பிரதேசத்தில் முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது தனியார் சொகுசு பஸ் மோதியதில் 14 பேர் பலியாயினர். 30 பேர் காயமடைந்தனர்.

டெல்லியில் இருந்து பீகாரில் உள்ள மோடிகரி நோக்கி தனியார் சொகுசு பஸ் நேற்றிரவு சென்றது. படுக்கை வசதி கொண்ட இந்த பஸ்சில் 50 பேர் சென்றனர். இந்த பஸ் ஆக்ரா- லக்னோ விரைவு நெடுஞ்சாலையில் சென்றது. உ.பி. மாநிலம் பெரோசாபாத் அருகே பஸ் படுவேகத்தில் சென்ற போது, எதிர்பாராதவிதமாக முன்னாள் சென்ற சரக்கு லாரி மீது பயங்கரமாக மோதியது. தூக்கத்தில் இருந்த பயணிகள் அலறித் துடித்தனர்.

உடனடியாக அருகில் உள்ள கிராமத்து மக்கள் வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டு, காயமடைந்தவர்கள் அனைவரும் எட்டாவா மாவட்டடம் சபாய் நகரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த விபத்தில் பஸ்சில் சென்ற 14 பேர் உயிரிழந்தனர். 30 பேர் வரை காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து நடந்த இடத்தில் ஐ.ஜி. சதீஷ் கணேஷ், எஸ்.பி. ராஜேஷ்குமார் ஆகியோர் பார்வையிட்டனர்.

காயமடைந்தவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிக்கவும், விபத்து குறித்து விசாரணை நடத்தவும் முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.


Speed News

 • டெல்லி அரசில் சம்பளம்

  போட பணம் இல்லை..

  டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா இன்று அளித்த பேட்டியில், ‘‘டெல்லி அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போடவும், சாதாரணச் செலவுகளுக்கும் மாதம் ரூ.3500 கோடி தேவை. ஆனால், கடந்த 2 மாதங்களாக ஜி.எஸ்.டி வசூல் தலா ரூ.500 கோடி அளவில்தான் உள்ளது. மற்ற வழிகளிலும் ரூ.1735 கோடி வருவாய் மட்டுமே கிடைத்துள்ளது. எனவே, மத்திய அரசாங்கம் டெல்லி அரசுக்கு உடனடியாக ரூ.5 ஆயிரம் கோடி நிதி அளிக்க வேண்டும்’’ என்றார். 

  May 31, 2020, 14:10 PM IST
 • தொழிலாளர்களுக்கு எவ்வளவு

  கொடுத்தீர்கள்.. கபில்சிபல் கேள்வி

   

  காங்கிரஸ் மூத்த தலைவர் கபி்ல் சிபில், பிரதமர் மோடிக்கு ஒரு கேள்வி எழுப்பியுள்ளார். அவர் கூறுகையில், ‘‘பி.எம். கேர் நிதியில் இருந்து இது வரை எத்தனை தொழிலாளர்களுக்கு எவ்வளவு பணம் கொடுத்தீ்ர்கள்? இந்த ஊரடங்கு காலத்தில் பல தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர். சிலர் ரயிலில் இறந்து்ள்ளார்கள். சில நடக்கும் போது இறந்துள்ளார்கள். சிலர் பசியால் மடிந்துள்ளார்கள். நீங்கள் எவ்வளவு தொகை கொடுத்தீ்ர்கள் என்று பதில் கூற வேண்டும்’’ என்றார்

  May 31, 2020, 14:07 PM IST
 • தெருவுக்கு வாங்கய்யா..

  யஷ்வந்த் சின்கா ட்விட்

  முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்கா இன்று ஒரு ட்விட் பதிவிட்டுள்ளார். அதில், ‘‘ஏழைகளின் துயரங்களை கவனிக்காமல், மத்திய அரசு கண்களையும், காதுகளையும் மூடிக் கொண்டிருக்கும் போது, எதிர்க்கட்சிகள் வெறும் மனுக்களை கொடுத்து கொண்டிருப்பது சரியா? இதற்கு மேலும் வெறும் அறிக்கைகள் எதுவும் பலனளிக்காது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் தெருவுக்கு வந்து போராட வேண்டும்’’ என்று கூறியுள்ளார். 

  May 23, 2020, 14:18 PM IST
 • சிறப்பு ரயில்கள் வேண்டாம்..

  மேற்கு வங்கம் கோரிக்கை

  மேற்கு வங்கத்தில் அம்பன் புயலால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. புயல் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்யும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதால், தற்போது சிறப்பு ரயில்களை இயக்க வேண்டாம் எ்னறு அம்மாநில அரசு கோரியு்ள்ளது. இது தொடர்பாக ரயில்வே வாரியத் தலைவர் வி.கே.யாதவுக்கு தலைமைச் செயலாளர் ராஜு சின்கா கடிதம் அனுப்பியு்ள்ளார், அதில், சிறப்பு ரயிலில் வரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பரிசோதனைக்கு உள்ளாக்கி, தனிமைப்படுத்துவதற்கு இயலாத சூழல் உள்ளதால், வரும் 26ம் தேதி வரை சிறப்பு ரயில்களை இயக்க வேண்டாம் எ்னறு கோரப்பட்டுள்ளது. 

  May 23, 2020, 13:57 PM IST
 • மகாராஷ்டிராவில் 44 ஆயிரம்

  பேருக்கு கொரோனா பாதிப்பு

  நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 44,582 பேருக்கு கொரோனா தொற்று பரவியிருக்கிறது. இதில், 12,583 பேர் குணமடைந்துள்ளனர். 1517 பேர் இந்நோய்க்கு பலியாகியுள்ளனர். மாநிலத்தில் மும்பையில்தான் அதிகபட்சமாக 27 ஆயிரம் பேருக்கு கொரானா தொற்று பரவியிருக்கிறது.

   

  May 23, 2020, 13:53 PM IST