டெல்லி கலவரம் குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தீர்மானம்..

by எஸ். எம். கணபதி, Mar 2, 2020, 10:47 AM IST

டெல்லியில் நடந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஒத்திவைப்பு தீர்மானங்களைக் கொடுத்துள்ளன.

நாடாளுமன்றம் கடந்த ஜனவரி 31ம் தேதி கூடியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், அன்று இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். மறுநாள் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2020-2021ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதன் மீதான விவாதத்திற்குப் பிறகு நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், பட்ஜெட் கூட்டத் தொடரின் 2 வது பகுதியாக நாடாளுமன்றம் இன்று கூடுகிறது. இந்த தொடரில் சிஏஏ போராட்டம், இதையொட்டி டெல்லியில் நடந்த கலவரம், பாஜக பிரமுகர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்ய காவல்துறை மறுத்த விவகாரம் போன்ற பல்வேறு பிரச்சினைகளைக் கிளப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. குறிப்பாக டெல்லி கலவரம் தொடர்பாகக் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒத்திவைப்பு தீர்மானங்களைக் கொடுத்துள்ளன.

You'r reading டெல்லி கலவரம் குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தீர்மானம்.. Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை